ராஜ்மா கிரேவி

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#PT
#weight loss gravy
புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரவி சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் கிடைப்பதுடன் குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலும் வயிறு நிரம்பும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
6பேர்
  1. 1.கப் ராஜ்மா பீன்ஸ்
  2. 3பெரிய வெங்காயம்
  3. 4சிறிய தக்காளி
  4. 2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1ஸ்பூன் மல்லி தூள்
  6. 1/2-1ஸ்பூன் மிளகாய் தூள், காரத்திற்கு
  7. 1/2ஸ்பூன் கரம் மசாலா
  8. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1ஸ்பூன் கஸ்தூரி மெதி
  10. சிறிதளவுமல்லிதழை
  11. தேவையானஅளவு உப்பு
  12. தேவையான அளவுவெங்காயம் பொரிக்க எண்ணெய்
  13. 3டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ராஜ்மா பீன்ஸ் ஐ 8மணி நேரம் ஊற வைத்து,2தம்ளர் தண்ணீர் ஊற்றி 8விசில் விட்டு வேக வைக்கவும்.

  2. 2

    இந்த கிரேவி நன்கு 'திக்'-க்காக இருக்கும்.இதில் சேர்க்கும் அளவுகளுக்கு 1-2 கப் அளவில் ராஜ்மா பீன்ஸ் சேர்க்கலாம். நான் 1கப் எடுத்துள்ளேன்.

  3. 3

    வெங்காயத்தை மெல்லியதாக அரிந்து,தேவையான அளவு எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். 3 பகுதிகளாக பொரித்துக் கொள்ளலாம்.

    தக்காளியை விழுதாக அரைக்கவும்.

  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி,பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.வதங்கியதும்,மல்லி,மிளகாய்,மஞ்சள்,கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    வதங்கியதும்,வேக வைத்த தண்ணீர் மற்றும் ராஜ்மா சேர்த்து,தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து 15-20நிமிடங்கள் நன்கு மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.

  6. 6

    பச்சை வாசம் போக கொதித்து,தேவையான கிரேவி பதம் வந்ததும் கஸ்தூரி மெத்தி மற்றும் மல்லித்தழை தூவி மேலும் 2நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அனைத்து பரிமாறவும்.

    இது சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

  7. 7

    அவ்வளவுதான். சுவையான,ராஜ்மா கிரேவி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes