பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்

#Book 1 & 2, #gravy, #goldenapron3
பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
#Book 1 & 2, #gravy, #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை சென்னாவை இரவு முழுவதும் ஊற வைத்து குக்கரில் சிறிது உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும். ஒரு கடாயில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து கொதிக்க விடவும். பின் அதில் பாலக் கீரையை சேர்த்து 1 நிமிடம் வேக வைக்கவும். பின்னர் வெந்த கீரையை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து குளிர்ந்த நீரில் அளசவும். பின்னர் கீரையை தண்ணீர் இல்லாமல் வடித்து ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து அதனுடன் 1 பச்சை மிளகாய், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும். (அதிக நேரம் அரைக்க கூடாது கீரையின் நிறம் மாறிவிடும்)
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம், உப்பு சேர்த்து வெங்காயம் நன்றாக நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் அதில் அரைத்த கீரை மற்றும் சென்னாவை சேர்க்கவும். பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பச்சை மிளகாய் விழுதை சேர்க்கவும் (ஒரு துண்டு இஞ்சி மற்றும் 1 பச்சை மிளகாய் அரைத்த விழுது) பின்னர் மீதம் உள்ள 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து நன்றாக கலந்து மிதமான தீயில் 3 நிமிடம் வேக வைக்கவும். பாலக் சோலே தயார்.
- 3
விரும்பினால் ஃப்ரஸ் கீரீம் சேர்த்து உண்ணலாம். (சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சைடிஸ்).
- 4
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, தக்காளி 1, மற்றும் 10-15 முந்திரி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கியவுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
- 5
பின்னர் அடுப்பை அணைத்து மசலா ஆறியவுடன் நன்றாக அரைத்துக் கொள்ளவும் (தேவையெனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்). பின்னர் அரைத்த விழுதை கடாயில் வடிக்கட்டி எடுத்துக் கொண்டு அதனுடன் 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் தேவையான அளவு உப்பு, கஸ்தூரி மெத்தி பவுடர் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்
- 6
பின்னர் பச்சை பட்டாணி, மற்றும் டோஃபு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் ப்ரஸ் கிரீம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து சப்பாத்தியுடன் பரிமாறலாம்
- 7
ராஜ்மாவை 8 மணி நேரம் ஊற வைத்து பின் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு பெரிய வெங்காயம், ஒரு இஞ்ச் அளவு இஞ்சி துண்டு, பூண்டு 5 பல், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 6ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் அதனுடன் 2 அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும் சிறிது உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், சீரக தூள், மிளகாய் தூள் சேர
- 8
பின்னர் அதில் வேகவைத்து எடுத்து வைத்த ராஜ்மாவை சேர்த்து அதனுடன் 1/4 டம்ளர் தண்ணீர் மற்றும் உப்பு (தேவையெனில்) சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு பரிமாறலாம். இட்லியுன் சாப்பிட ஏற்றது.
- 9
குக்கரில் நெய் சேர்த்து அதில் சீரகம், மிளகு தூள், சாட் மாசாலா சேர்த்து அதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய உருளைக் கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி மிதமான தீயில் குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கவும். (தண்ணீர் சேர்க்க கூடாது) பின் 10நிமிடம் குக்கரில் அப்படியே விட்டு பின்னர் கொத்தமல்லி தூவி ப்ரட் ரோஸ்ட், தோசையுடன் சாப்பிட அருமை.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராஜ்மா மசாலா(rajma masala recipe in tamil)
#npd3Garam masala.... சப்பாத்தி, சாதம், தொட்டு சாப்பிட கூடிய சுவை மிக்க ஆரோக்கியமான ராஜ்மா மசாலா கறி.. Nalini Shankar -
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
-
-
-
-
-
-
ராஜ்மா கிரேவி
#PT#weight loss gravyபுரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரவி சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் கிடைப்பதுடன் குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலும் வயிறு நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
-
காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபி (Rajma Recipe in Tamil)
#golden apron2.ராஜ்மா என்பது சிலவருடங்களுக்கு முன்பு நமக்கு என்னவென்றே தெரியாது ஏனென்றால் அது ஜம்மு காஷ்மீர் மற்றும் சில வட மாநிலங்களில் மட்டுமே சமைக்கக் கூடிய உணவாக இருந்தது ஆனால் இப்போது எல்லா மாநில உணவுகளும் எல்லா மாநிலங்களிலும் சமைத்து சாப்பிடக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது நம் குழு மூலம் வடமாநில உணவுகளையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வீட்டில் உள்ளவர்களையும் விதவிதமான ரெசிபிகளை கொடுத்து மகிழ்விக்க முடிகிறது. Santhi Chowthri -
-
-
-
கொண்டைக்கடலை ராஜ்மா குருமா (Kondaikadalai rajma kuruma recipe in tamil)
#india2020#homeஇதை செய்து பாருங்கள் ருசி அள்ளும் Sharanya -
-
-
-
பட்டாணி புதினா மசாலா (Pattani puthina masala recipe in tamil)
#goldenapron3 #pudina Soundari Rathinavel -
காலிஃபிளவர் கிரேவி (cauliflower gravy recipe in tamil)
#Gravy#Goldenapron3#ilovecooking KalaiSelvi G -
லசூனி பாலக்
தேசி உணவை நிரூபிக்க போதுமானது மற்றொரு எளிய, ருசியான, ஆரோக்கியமான கீரை கறி. வேகவைத்த அரிசி / பொல்காஸ் ஒரு கிண்ணத்தில் அதை இணைக்கவும். ஜீவன் ஹெவன். # கரி # போஸ்ட் 2 Swathi Joshnaa Sathish -
-
சென்னா மசாலா சுண்டல் (Channa masala sundal recipe in tamil)
#goldenapron3#week21குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D
More Recipes
கமெண்ட் (2)