*ஹெல்தி முருங்கை கீரை அடை*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#WA
மகளிர் தின வாழ்த்துக்கள். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
8 பேர்
  1. இட்லி புழுங்கலரிசி 1 1/4 கப்
  2. து.பருப்பு 1/4 கப்
  3. பாசி பருப்பு 1/4 கப்
  4. க.பருப்பு 1/4 கப்
  5. உ.பருப்பு 3 டேபிள் ஸ்பூன்
  6. சி.மிளகாய் 15
  7. பூண்டு 10 பல்
  8. சோம்பு 1 1/4 டீ ஸ்பூன்
  9. பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன்
  10. பெரிய வெங்காயம் 2 (அ) சின்ன வெங்காயம் 25
  11. முருங்கை கீரை 1/4 கப்
  12. தேங்காய் துருவல் 1/2 கப்
  13. உப்பு தேவையான அளவு
  14. எண்ணெய் சுடுவதற்கு
  15. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், முருங்கை கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    இட்லி அரிசியை களைந்து, தேவையான தண்ணீர் விட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    பருப்புகளை களைந்து, தேவையான தண்ணீர் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  4. 4

    ஊறின பருப்பை, பூண்டு, சோம்பு, மிளகாய் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.

  5. 5

    அடுத்து அரிசியை ரவை போல அரைக்கவும்.

  6. 6

    அரைத்த பருப்புடன், ரவை போல் உடைத்த அரிசியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைக்கவும்.

  7. 7

    தேங்காயை துருவிக் கொள்ளவும். மாவுடன், வெங்காயம், முருங்கை கீரை, தேங்காய் துருவல்,உப்பு, சேர்த்து மாவை, சிறிது தண்ணீர் சேர்த்து சற்று இளக்கிக் கொள்ளவும்.

  8. 8

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, தவா சூடானதும்,மாவை ஊற்றி, நடுவில் ஓட்டை போட்டு, எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும், வேகவிட்டு சிவக்க கருகாமல் எடுக்கவும்.

  9. 9

    எடுத்ததும், அடுப்பை நிறுத்தி விடவும். இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*ஹெல்தி முருங்கை கீரை அடை*தயார். இதற்கு வெல்லம் மிகவும் ஆப்ட்டாக இருக்கும். ஹெல்தி இந்த அடையை செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.

  10. 10

    குறிப்பு:- இந்த அடையில், புரோட்டீன் சத்தும், இரும்புச் சத்தும் அதிகமாக உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes