பச்சை பயறு மசியல் (Green moong gravy)

பச்சை பயறு அதிக சத்துக்கள் நிறைந்தது.இதில் நிறைய வைட்டமின்கள் உள்ளது.இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாமல் தடுக்கும் சக்தி உள்ளது.இரத்த ஓட்டத்தை சீராக்கும், சர்க்கரை அளவை குறைக்கும்,உடல் பருமனை குறைக்கும், உடல் எடையை சீராக்கும் தன்மை போன்ற நிறைய மருத்துவ குணங்களை கொண்டது இந்த பச்சை பயறு.
#WA
பச்சை பயறு மசியல் (Green moong gravy)
பச்சை பயறு அதிக சத்துக்கள் நிறைந்தது.இதில் நிறைய வைட்டமின்கள் உள்ளது.இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாமல் தடுக்கும் சக்தி உள்ளது.இரத்த ஓட்டத்தை சீராக்கும், சர்க்கரை அளவை குறைக்கும்,உடல் பருமனை குறைக்கும், உடல் எடையை சீராக்கும் தன்மை போன்ற நிறைய மருத்துவ குணங்களை கொண்டது இந்த பச்சை பயறு.
#WA
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பயரை நன்கு வறுத்து கழுவி, குக்கரில் சேர்த்து,மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வைத்து எடுக்கவும்.
- 2
பின்னர் எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து, ஸ்டவ்வில் வைத்து வேக வைக்கவும்.
- 3
வெங்காயம், தக்காளி,பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 4
ஸ்டவ்வில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெங்காயம்,பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 5
அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி,மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 6
பின்னர் இஞ்சி பூண்டு விழுது,உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- 7
நன்கு வதங்கியதும் எடுத்து வேகும் பச்சை பயரில் சேர்த்து நன்கு மசித்து விடவும்.
- 8
மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.உப்பு சரிபார்த்து,நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் பச்சை பயறு மசியல் தயார்.
- 9
மிகவும் சத்தான இந்த பச்சை பயறு மசியல் சூடான சாதம்,சப்பாத்தியுடன் சேர்த்து,கொஞ்சம் நெய் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
பச்சை பயறு கிரேவி (Pachai payaru gravy recipe in tamil)
பச்சைப்பயிறு நிறைய சத்துக்களை கொண்டது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. முளைகட்டி செய்யும்போது பச்சை பயிரின் சத்துக்கள் அதிகரிக்கிறது.#Jan 1# Senthamarai Balasubramaniam -
பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி. Sowmya Sundar -
பச்சை பயறு குழம்பு (Moong dal tadka recipe in tamil)
பச்சை பயறில் விட்டமின் ஏ, பீ, இ கால்சியம், மெக்னீசியம்,புரதம், கார்போ ஹைட்ரேட் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ளன.#nutrition Renukabala -
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் . Shyamala Senthil -
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
பச்சை பயறு பொடி (leftover moong curry powder)
#leftoverஇந்த பச்சை பயறு கடையல் செய்முறை, எனது ரெசிபி பகுதி பதிவில் பார்க்கவும். Renukabala -
பச்சை பயறு சுசீயம்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி Kavitha Chandran -
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
பச்சை மஞ்சள் குழம்பு (Raw Turmeric Gravy)(Pachai manjal kulambu recipe in tamil)
பச்சை மஞ்சள் கிழங்கு நிறைய மருத்துவ குணம் கொண்டது. தினமும் ஒரு சிறிய துண்டு உட்கொண்டால் மிகவும் சிறந்தது.இன்ஸ்பிளமேசனை கட்டுப்படுத்தும்.#GA4 #Week21 #RawTurmeric Renukabala -
-
காய்ந்த பச்சை பட்டாணி மசாலா(Dry green peas masala in Tamil)
*பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன.* இந்த காய்ந்த பட்டாணியை வைத்து குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக நாம் செய்து தரலாம்.#Ilovecooking kavi murali -
முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)
#arusuvai5நீர் சத்து நிறைந்த முள்ளங்கி உடம்புக்கு நல்லது. உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. Sahana D -
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
-
தக்காளி குழம்பு (Tomato gravy)
#momஇந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் A, C உள்ளது. இதற்கு கண் பார்வை, மாலைக்கண் வியாதியை தடுக்கும் ஆற்றலும் உள்ளது. இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது. தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமனையும் தடுக்கும். Renukabala -
-
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
-
பச்சை பயறு சுண்டல்
சத்தான சுவையான பச்சை பயறு சுண்டல். வளரிளம் குழந்தைகளுக்கு தர வேண்டிய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவாகும். Swarna Latha -
-
பச்சை பயறு வடை (Whole Moong vada) (Pachai payaru vadai recipe in tamil)
பச்சை பயரை ஊற வைத்து செய்த இந்த வடை மிகவும் சுவையாக வெளிப்புறம் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Pooja Renukabala -
-
தயிர் பச்சை ஆப்பிள் தேங்காய் சட்னி (Curd Green Apple Chutney)
பச்சை ஆப்பிளில் சிவப்பு ஆப்பிளை விட சத்துக்கள் அதிகம்.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடம்புக்கு தேவையான எல்லா வித சத்துக்களும் கிடைத்துவிடும். இது எலும்பை பலப்படும், கெல்லாம் கொழுப்பை நீக்கும், அல்சைமர் நோயை குணப்படுத்தும், குடல் புற்று நோயை தடுக்கும் என சொல்லிக்கொண்டே போகலாம். அத்துணை சத்துக்கள் நிறைந்த கிறீன் ஆப்பிளை வைத்து இந்த சட்னி செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
மூளைக் கட்டிய பச்சை பயறு சுண்டல்(sprouted green gram sundal recipe in tamil)
மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய முளைகட்டிய பச்சை பயிர் சுண்டல் அதிக புரோட்டின் கிடைக்கும். Meena Ramesh -
-
-
பயறு சூப்🍵
#nutrient1 #bookபயறு வகைகள் எல்லாவற்றிலும் புரத சத்து அதிகம் உள்ளது. நாம் நம் அன்றாட பணிகளை ஆற்றலுடன் செயல் படுத்த புரோட்டீன் சக்தி மிக முக்கியமான ஒன்றாகும். புரோட்டின் சக்தி மட்டுமல்லாமல் கால்சியம், மினரல் போன்ற சக்திகளும் நம் உடலுக்கு தேவைப்படுகிறது. இந்த சக்திகளையெல்லாம் நாம் நம் அன்றாட உணவு வகைகளில் எடுத்து கொள்ள முடியும். பாசிப் பயறும் கடலைப் பருப்பும் சேர்த்து வேகவைத்து வடித்த தண்ணீரில் தக்காளி, இஞ்சி, பூண்டு, சீரகத்தூள் சேர்த்து செய்த சுவையான பயறு சூப் ஆகும் இது. வேக வைத்த பயிறு வகைகளை சுண்டல் ஆக தாளித்துக் கொள்ளலாம்.வடித்த தண்ணீரில் உள்ள சத்துகளை வீணாக்காமல் குடிப்பதினால் நாம் மேலும் பயன் பெற முடியும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு தோன்றும்.😋 Meena Ramesh -
தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.#sambarrasam Renukabala
More Recipes
கமெண்ட் (8)