*முருங்கைக்காய் பால் கறி*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இது, மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.மேலும் சிறுநீரகத்திற்கு பலத்தையும், உடலுக்கு வலுவையும், தருகின்றது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. முருங்கைக்காய் நறுக்கினது 1/2 கப்
  2. காய்ச்சி ஆறிய பால் 1 கப்
  3. திக்கான தேங்காய் பால் 1 கப்
  4. மீடியம் சைஸ் வெங்காயம் 2
  5. உப்பு ருசிக்கு
  6. ம.தூள் 1/2 டீ ஸ்பூன்
  7. தனி மிளகாய் தூள் 1 டீ ஸ்பூன்
  8. தாளிக்க:- கடுகு 3/4 டீ ஸ்பூன்
  9. எண்ணெய் 1 ஸ்பூன்
  10. கொத்தமல்லி தழை சிறிதளவு
  11. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    முருங்கைக்காய், வெங்காயம், இரண்டையும் சுத்தம் செய்து, முருங்கைக் காயை சற்று பெரிய துண்டுகளாகவும், வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும்.

  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகை போட்டு பொரிந்ததும், வெங்காயம், ம.தூள், உப்பு, சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பிறகு, நறுக்கின முருங்கைக்காய், மிளகாய், தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

  5. 5

    தேங்காயை துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் போட்டு,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து திக்காக பால் எடுத்து, காய் பாதி வெந்ததும் ஊற்றி கொதிக்க விடவும்.

  6. 6

    ஒன்று சேர கொதித்ததும், பாலை சேர்த்து கொதித்து கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  7. 7

    இறக்கினதும் பௌலுக்கு மாற்றவும்.

  8. 8

    மேலே கொத்தமல்லி தழையை போடவும். இப்போது, சுவையான, சுலபமான,*முருங்கைக்காய் பால் கறி*தயார். இது, சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். சூடான சாதத்தில் நெய் விட்டும் சாப்பிடலாம். செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes

More Recommended Recipes