சிவப்பரிசி இட்லி,தோசை

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

சிவப்பரிசி இட்லி,தோசை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
8பேர்
  1. 3கப் சிவப்பரிசி
  2. 1கப் இட்லி அரிசி/புழுங்கல் அரிசி
  3. 1கப் உளுந்து
  4. கைப்பிடி அளவு அவல்
  5. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    இரண்டு அரிசிகள் கலந்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கழுவி 4மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    உளுந்து 1மணி நேரம் ஊற வைக்கவும். தாள் அவல் எனில் 10நிமிடங்கள்,திக் அவல் எனில் 40நிமிடங்கள் ஊறவைக்கவும்.

  4. 4

    முதலில்,உளுந்தை மிக்சி அல்லது கிரைண்டரில் சேர்த்து மைய அரைத்து வெண்ணையாக திரண்டு வரும்போது எடுத்து விடவும்.

  5. 5

    அரிசி, அவல் மற்றும் உப்பு சேர்த்து வெள்ளை ரவை பக்குவத்தில் எடுத்து உளுந்துடன் கலந்து, குறைந்தது 7மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  6. 6

    இனி,புளித்த மாவை லேசாக கலந்து விட்டு,இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்கும்போது, மாவை இட்லி தட்டில் ஊற்றி 10நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். சாப்ட்-டான இட்லி ரெடி.

  7. 7

    இதே மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்க்கலம்.

  8. 8

    அவ்வளவுதான். சுவையான,சத்தான சிவப்பரிசி இட்லி, தோசை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes