*வாழைக்காய் வறுவல்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

வாழைக்காயில், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது.

*வாழைக்காய் வறுவல்*

வாழைக்காயில், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. வாழைக்காய் 2
  2. ம.தூள் 3/4 டீ ஸ்பூன்
  3. தனி மி.தூள் 2 ஸ்பூன்
  4. அரிசி மாவு 1 1/2 - 2 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு ருசிக்கு
  6. தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
  7. க. பருப்பு 3/4 ஸ்பூன்
  8. உ.பருப்பு 1/2 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  10. எண்ணெய் 2 - 3 டேபிள் ஸ்பூன்
  11. தண்ணீர் 2 ஸ்பூன் (பிசிறிக் கொள்ள)

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாழைக்காயை தோல் சீவி, வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    நறுக்கிய வாழைக்காயுடன், ம.தூள், மிளகாய்த்தூள், அரிசிமாவு, உப்பு சேர்த்து, காரம் காயுடன் ஒட்டுவதற்கு, 2 ஸ்பூன் தண்ணீர் தெளித்து நன்கு பிசிறிக் கொள்ளவும்.

  4. 4

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு போட்டு வெடித்ததும், க.பருப்பு, உ.பருப்பு போட்டு கருகாமல் சிவக்க வறுக்கவும்.

  5. 5

    வறுத்ததும், பிசிறின வாழைக்காயுடன், கறிவேப்பிலையை சேர்த்து எண்ணெயிலேயே நன்கு வறுக்கவும்.

  6. 6

    நன்கு வெந்து, கிரிஸ்ப்பாக வறுபட்டதும, அடுப்பை நிறுத்தி விடவும்.

  7. 7

    பிறகு பிளேட்டிற்கு மாற்றவும்.

  8. 8

    இப்போது, சுலபமான, சுவையான,*வாழைக்காய் வறுவல்*தயார். இது, சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். ரெசிபியை செய்து பார்த்து, அசத்தி என்ஜாய் செய்யவும்.

  9. 9

    குறிப்பு:- இதை ஈவ்னிங் ஸ்னாக்காக, காபி, டீயுடன் சாப்பிட, மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Top Search in

Similar Recipes