*வாழைக்காய் சுக்கா*(valaikkai sukka recipe in tamil)

#SU
இதில் வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்துகின்றது.
*வாழைக்காய் சுக்கா*(valaikkai sukka recipe in tamil)
#SU
இதில் வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்துகின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து சற்று பெரியதாக நறுக்கவும்.
- 2
வாழைக்காயை சுத்தம் செய்து, தோல் சீவி, சற்று பெரிய துண்டுகளாக தண்ணீரில் நறுக்கிப் போடவும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு சிறிது உப்பு சேர்த்து பிசிறிக் கொள்ளவும்.
- 3
மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்தவைகளை போட்டு, தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், 2 டேபிள் ஸ்பூன் தே.எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிசிறின வாழைக்காயை, சிறிது சிறிதாக போட்டு, பொரித்துக் கொண்டு பௌலில் எடுத்துக் கொள்ளவும்.
- 5
அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில், பொரித்த எண்ணெயுடன்,மேலும், 1/2 ஸ்பூன், தே.எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகை போட்டு பொரிந்ததும், அரைத்த விழுதை போட்டு எண்ணெய் பிரிய நன்கு வதக்கவும்.
- 6
வதக்கினதும், பொரித்த வாழைக்காயை போடவும்.
- 7
அடுத்து ஒன்று சேர நன்கு வதக்கி வாழைக்காய் குழையாமல் வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 8
பிறகு பௌலுக்கு மாற்றவும். இப்போது, சுவையான, சுலபமான,*வாழைக்காய் சுக்கா* தயார். செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.
- 9
குறிப்பு:- இது தே.எண்ணெயில் செய்ததால் கூடுதல் சுவை. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு சைட்டிஷ்ஷாக மிகவும் ஆப்ட்டாக இருக்கும். ஈவ்னிங் சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*வாழைக்காய், பெப்பர் மசாலா சுக்கா*(valaikkai pepper chukka recipe in tamil)
#SUபச்சை வாழைக்காயில், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த உதவுகின்றது. Jegadhambal N -
*வாழைக்காய் வறுவல்*
வாழைக்காயில், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
* டேஸ்ட்டி, சென்னா சுண்டல் *(channa sundal recipe in tamil)
#KUசென்னாவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.மேலும்,புற்றுநோய், இரத்தச்சோகை, வராமல் தடுக்கின்றது.நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
#BRதக்காளி, எலும்புகள், பற்கள் வலுப் பெறுவதற்கு பெரிதும் உதவுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம். Jegadhambal N -
*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian Curriesவெண்டைக்காய், ஊறின தண்ணீர் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகின்றது. வைட்டமின் சி அதிகம் உள்ளது.வெண்டைக்காயை சூப் செய்து சாப்பிட்டால், சளி, இருமல், குணமாகும். Jegadhambal N -
*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
#HJபொதுவாக எல்லா வகையான கீரைகளுமே உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.எனவே நாம் வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. Jegadhambal N -
* வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)
#DGவாழைக்காயில் தேவையான வைட்டமின், கால்ஷியம், மெக்னீஷியம் உள்ளது.இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது. Jegadhambal N -
வாழைக்காய் பொடி பொரியல்
வாழைக்காய் பொரியலில் நான் போட்டிருக்கும் பொடியின் அளவை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டி அதிகமாக அரைத்து ஸ்டோர் செய்து கொண்டு இந்த பொடியை தேவைப்படும்போது சுண்டல், பொரியல்,சாம்பார்,வத்தகுழம்பிற்கு உபயோகப்படுத்தலாம்.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
-
-
* ஆலூ வெஜ் பிரியாணி*(potato veg biryani recipe in tamil)
#ricஇதில் கொழுப்புச் சத்து அதிகம் இல்லை.எளிதில் ஜீரணமாகக் கூடியது.இதில் அதிகமாக மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை குறைக்கச் செய்கின்றது. Jegadhambal N -
வரகு வெஜ் பிரியாணி(varagu veg biryani rcipe in tamil)
#CF1வரகு அரிசி,குழந்தைகள் எதிர்ப்பு சக்தியோடு வளர பெரிதும் உதவும்.இதில் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக உள்ளது.உடல் நச்சை நீக்கி எடையை குறைக்க உதவும்.வரகு அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். Jegadhambal N -
* வாழைக்காய் காரக் கறி*(valaikkai kara curry recipe in tamil)
வாழைக்காய் பொரியல், மோர்க் கூட்டு,பஜ்ஜி, பொடி மாஸ், என்று விதவிதமாக செய்யலாம்.வாழைக்காயில் காரக் கறி செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.தே.எண்ணெயில் செய்ததால் கூடுதல் சுவை. Jegadhambal N -
*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல், அனைவருக்கும், பிடித்த ஒன்று.இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian curriesபனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
*ப்ரோக்கோலி பொரியல்*(broccoli poriyal recipe in tamil)
இதில் குளுக்கோசினோலேட், நிறைந்துள்ளன.நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.மார்பக புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கும். Jegadhambal N -
*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)
புடலங்காயை சமைத்து சாப்பிட்டால், குடல்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்து. கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
*வீட் பிரெட் வெஜ் உப்புமா*(wheat bread veg upma recipe in tamil)
#lbவீட் பிரெட் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. பிரெட்டுடன் காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையைக் கொடுக்கும். Jegadhambal N -
*ஸ்பைஸி க்ரீன் பீஸ் பிரியாணி*(spicy green peas biryani recipe in tamil)
#FRஇந்த ரெசிபியை முதல் முறையாக செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், அபாரமாகவும், இருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
வாழைக்காய் புட்டு (Vaazhaikkai puttu recipe in tamil)
# my recipeசர்க்கரை வியாதிவாழைக்காய் மற்றும் வாழை மரம் தொடர்பான அனைத்துமே நமது உடலில் இருக்கும் ரத்த செல்களில் குளுகோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது. Sangaraeswari Sangaran -
வாழைக்காய் பொடிமாஸ்
இந்த பொடிமாஸின் ஹைலைட்டே இதில் போட்டிருக்கும் பொடி தான்.இதை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும்,மணமும் கூடும்.நான் இதனை அடிக்கடி செய்வேன். சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.நெய்தான் நன்றாக இருக்கும். Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*ஆலூ, ஜீரா வறுவல்*(aloo jeera fry recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாளில் கண்டிப்பாக உருளை கிழங்கு ரெசிபி இருக்கும். நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், எடையைக் குறைக்கவும், முருங்கை இலை பயன்படுகின்றது.இரும்பு, தாமிரம்,சுண்ணாம்புச் சத்து இதில், உள்ளது. Jegadhambal N -
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
பிரஸ் பட்டர் பீன்ஸ் சாதம் (Butter beans satham recipe in tamil)
#JAN1பட்டர் பீன்ஸில் ரிச் புரோட்டின் உள்ளது இதில் கால்சியம் தயமின் விட்டமின் கே ஆகியவை உள்ளன இதில் அசைவ உணவிற்கு இணையான சத்துக்கள் உள்ளன. இது வளரும் இளம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
*பாகற்காய் ஃபிரை*(bittergourd fry recipe in tamil)
#ChoosetoCookபாகற்காய் ஃபிரை எனக்கு மிகவும் பிடிக்கும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இது இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. பாகற்காயை ஜூஸ் ஆக்கி குடிப்பது குடலில் உருவாகும், குடல் புழுக்கள், ஒட்டுண்ணிகளை கொல்ல உதவுகின்றது. Jegadhambal N -
கேப்ஸிகம் ஸ்பைஸி தொக்கு(Capsicum spicy thokku recipe in tamil)
குடமிளகாயில் வைட்டமின் C சத்து உள்ளது. மேலும், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது.முதுமை தன்மையை குறைக்க உதவும்.இதில் இரும்பு சத்து உள்ளது.பச்சை,மஞ்சள்,சிவப்பு,என்று எந்த நிறமாக இருந்தாலும் இதே முறையில் செய்யலாம்.நான் பச்சை நிறத்தை எடுத்துக் கொண்டேன். Jegadhambal N
More Recipes
கமெண்ட் (7)