*மைசூர் சட்னி*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த சட்னி, தோசைக்கு நல்ல காம்பினேஷன். செய்வது சுலபம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
8 பேர்
  1. வெள்ளை எள் 1 டேபிள் ஸ்பூன்
  2. பெரிய வெங்காயம் 1
  3. பொட்டுக்கடலை 2 டேபிள் ஸ்பூன்
  4. தேங்காய் 1/4 மூடி
  5. பூண்டு 6 பல்
  6. காஷ்மீரி மிளகாய் 4
  7. சி.மிளகாய் 8
  8. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  9. உப்பு ருசிக்கு
  10. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  11. ந.எண்ணெய் 2 ஸ்பூன்
  12. தண்ணீர் தேவையான அளவு
  13. அலங்கரிக்க:- வட்டமாக நறுக்கின வெங்காய ரிங்க்ஸ்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வெங்காயத்தை சற்று பொடியாக நறுக்கவும்.

  3. 3

    சுடு தண்ணீரில், காஷ்மீரி மிளகாய், சி.மிளகாய், புளியை ஊற வைக்கவும்.

  4. 4

    தேங்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் 2 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், எள்ளை சிறிது வறுக்கவும்.

  6. 6

    எள்ளை வறுத்ததும், வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு, வதக்கி, அதனுடன், தேங்காய், பூண்டு, கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

  7. 7

    ஆறினதும், மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன், தேங்காய் துண்டுகள், பொட்டுக்கடலை, ஊறவைத்த, புளி, மிளகாய், உப்பு, சேர்த்து, ஒரு சுற்று சுற்றினதும், சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.

  8. 8

    அரைத்ததை பௌலுக்கு மாற்றவும்.

  9. 9

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*மைசூர் சட்னி*தயார். இதற்கு தாளிப்பு தேவையில்லை. செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.

  10. 10

    குறிப்பு:- தோசை வார்த்து, மேலே இந்த சட்னியை பரப்பி, நெய் விட்டு, மொறுமொறுப்பாக எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes