*வெண்பூசணி, ஆனியன், பொரியல்*(venpoosani poriyal recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#HJ
அல்சர் நோயால் அவதிப்படுபவர்களுக்கு, வெண் பூசணி சாறு உடனடி பலனை தரும். இருமல், ஜலதோஷம், நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலை சுற்றல், ஆகியவற்றை நீக்கப் பயன்படுகிறது.

*வெண்பூசணி, ஆனியன், பொரியல்*(venpoosani poriyal recipe in tamil)

#HJ
அல்சர் நோயால் அவதிப்படுபவர்களுக்கு, வெண் பூசணி சாறு உடனடி பலனை தரும். இருமல், ஜலதோஷம், நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலை சுற்றல், ஆகியவற்றை நீக்கப் பயன்படுகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
6 பேர்
  1. 1/2கிவெண் பூசணி
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  4. 1/2 ஸ்பூன்கறிப்பொடி
  5. ருசிக்குஉப்பு
  6. அரைக்க:-
  7. 2ப.மிளகாய்
  8. 1/2 ஸ்பூன்சீரகம்
  9. 2 டேபிள் ஸ்பூன்தேங்காய் துண்டுகள்
  10. 1/4 டீ ஸ்பூன்ம.தூள்
  11. தாளிக்க:-
  12. 1 டீ ஸ்பூன்கடுகு
  13. 1/2 டீ ஸ்பூன்க.பருப்பு
  14. 1/2 டீ ஸ்பூன்உ.பருப்பு
  15. 2சி.மிளகாய்
  16. 1 கொத்துகறிவேப்பிலை
  17. 2 ஸ்பூன்எண்ணெய்
  18. அலங்கரிக்க:-
  19. வட்டமாக நறுக்கின வெங்காய துண்டுகள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பூசணிக்காயை, சுத்தம் செய்து, தோலை நீக்கி பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, தேங்காயை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, ம.தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    நன்கு வதக்கியதும், பூசணி துண்டுகளை, போட்டு சிறிது தண்ணீர் தெளித்து 5 நிமிடம் வேகவிடவும்.

  5. 5

    மிக்ஸி ஜாரில், ப.மிளகாய், தேங்காய், சீரகம், ம.தூள் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

  6. 6

    பூசணிக்காய் வெந்ததும், அரைத்தை சேர்த்து, வெந்ததும், கறிப்பொடி போடவும்.

  7. 7

    2 நிமிடம் ஒன்று சேர வெந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு, பௌலுக்கு மாற்றவும்.

  8. 8

    இப்போது, சுவையான, சுலபமான, ஆரோக்கியமான,*வெண்பூசணி, ஆனியன், பொரியல்*தயார். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes