*சேப்பங்கிழங்கு மசியல்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
8 பேர்
  1. சேப்பங்கிழங்கு 3/4 கி
  2. ம.தூள் 3/4 டீ ஸ்பூன்
  3. தனி மிளகாய் தூள் 2 1/2 ஸ்பூன்
  4. அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன்
  5. உப்பு ருசிக்கு
  6. பெரிய எலுமிச்சம் பழம் 1/2 மூடி
  7. தாளிக்க:- கடுகு 3/4 டீ ஸ்பூன்
  8. க.பருப்பு 3/4 ஸ்பூன்
  9. உ.பருப்பு 1/2 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  11. தே.எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  12. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    சேப்பங்கிழங்கு சுத்தம் செய்து பாதி துண்டுகளாக நறுக்கவும்.

  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரில் சேப்பங்கிழங்கு, ம.தூள், உப்பு போட்டு 1 விசில் விட்டு வேகவிட்டு, ஆறினதும், தோலுரித்து கையால் மசித்துக் கொள்ளவும்.

  4. 4

    மசித்த சேப்பங்கிழங்கில், அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், தே.எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன் விட்டு சூடானதும், கடுகு போட்டு வெடித்ததும், க.பருப்பு, உ.பருப்பு போட்டு கருகாமல் சிவந்ததும், கறிவேப்பிலை, ம.தூள், மி.தூள் போட்டு வறுக்கவும்.

  6. 6

    வறுபட்டதும், சேப்பங்கிழங்கை போட்டு எண்ணெயிலேயே வெந்து மசிந்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  7. 7

    எலுமிச்சை சாறை விட்டு கிளறி, பிறகு இறக்கி பௌலுக்கு மாற்றவும்.

  8. 8

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*சேப்பங்கிழங்கு மசியல்*தயார். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம். தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை கிடைக்கும். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes