*வாட்டர் மெலோன் குல்ஃபி* (சம்மர் ஸ்பெஷல்)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

தர்பூசணி சீசன். இதில் பலவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். சம்மருக்கு ஏற்ற குளுகுளு ரெசிபி. இதை செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரெசிபி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
4 பேர்
  1. தர்பூசணி துண்டுகள் 1 கப்
  2. சர்க்கரை 2 - 3 ஸ்பூன் (அவரவர் விருப்பம்)
  3. உப்பு 1 சிட்டிகை (ருசிக்கு)
  4. சீவின பாதாம் துண்டுகள் 1 டேபிள் ஸ்பூன்
  5. ஐஸ்க்ரீம் குச்சிகள் 4

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கி விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

  3. 3

    பெரிய மிக்ஸி ஜாரில் தர்பூசணி துண்டுகள், சர்க்கரை, உப்பை சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    பிறகு மைய அரைக்கவும்.

  5. 5

    அரைத்ததை டம்ளர்களில் ஊற்றவும்.

  6. 6

    பாதாமை துண்டுகளாக நறுக்கி மேலே போடவும்.

  7. 7

    நடுவில் ஐஸ்கிரீம் குச்சிகளை சொருகி ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும்.

  8. 8

    பிறகு வெளியே எடுத்து விடவும்.

  9. 9

    அகலமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு டம்ளர்களை அதில் வைத்து 1 நிமிடம் கழித்து எடுக்கவும்.

  10. 10

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*வாட்டர் மெலோன் குல்ஃபி*தயார். செய்து, குடும்பத்துடன் சம்மரை என்ஜாய் செய்யவும்.

  11. 11

    குறிப்பு:- எனக்கு 1 கப் தர்பூசணி துண்டுகளுக்கு, 4 குல்ஃபி வந்தது. ஃபாயில் இருந்தால், டம்ளரை சுற்றி வைத்து நடுவில் ஓட்டை போட்டு குச்சியை சொருகி ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும். சர்க்கரைக்கு பதில், தேன், சேர்த்தும் அரைக்கலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes