*ஒன்பாட் ரசம் சாதம்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. வெண்புழுங்கலரிசி 1கப்
  2. து.பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  3. புளி நெல்லிக்காய் அளவு
  4. ரசப்பொடி 1 ஸ்பூன்
  5. சாம்பார் பொடி 1ஸ்பூன்
  6. ம.தூள் 3/4 டீ ஸ்பூன்
  7. கல் உப்பு ருசிக்கு
  8. பெரிய தக்காளி 1
  9. தாளிக்க:- கடுகு 3/4 டீ ஸ்பூன்
  10. சீரகம் 3/4 டீ ஸ்பூன்
  11. சி.மிளகாய் 4
  12. பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன்
  13. நெய் 1 ஸ்பூன்
  14. கறிவேப்பிலை 2 ஆர்க்கு
  15. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பௌலில், அரிசி, து.பருப்பை தண்ணீர் விட்டு நன்கு களைந்து, 1 டம்ளர் தண்ணீர் விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.

  3. 3

    தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  4. 4

    புளியை ஊற வைத்து, பின் நன்கு கரைத்து வடிகட்டவும்.

  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரில், 1 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும், கடுகு வெடித்ததும், சீரகம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்ததும், ம.தூள், சாம்பார் பொடி, ரசப் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.

  6. 6

    அடுத்து தக்காளியை சேர்த்து,1 நிமிடம் வதக்கினதும், ஊற வைத்த, அரிசி, து. பருப்பை ஒரு பிரட்டு பிரட்டிக் கொள்ளவும்.

  7. 7

    பிறகு 1 டம்ளர் தண்ணீர்+ 4 டம்ளர் புளித்தண்ணீர் வீதம், 5 டம்ளர் ஊற்றி, குக்கரை மூடி 6 விசில் விட்டு குழைய வேகவிட்டதும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  8. 8

    குழைய வெந்ததும், குக்கரை ரிலீஸ் செய்யவும்.

  9. 9

    ரிலீஸ் செய்ததும் பௌலுக்கு மாற்றவும். மேலே, 1 ஸ்பூன் நெய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சேர்த்து ஒன்றாக கிளறவும்.

  10. 10

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*ஒன்பாட் ரசம் சாதம்*தயார். செய்து பார்த்து, குழந்தைகள் முதல் அனைவரும் என்ஜாய் செய்யவும்.

  11. 11

    குறிப்பு:- நான் வெண்புழுங்கலரிசி யில் இதனை செய்தேன். பச்சரிசியிலும் இதனை செய்யலாம். இதற்கு, கூட்டு, பொரியல், பொரித்த அப்பளம், வடகம், சைட்டிஷ்ஷாக மிகவும் ஆப்ட்டாக இருக்கும். விருப்பப்பட்டால், சிறு கட்டி வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். நான் வெல்லம் சேர்க்கவில்லை.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes