*கத்தரிக்காய் வறுவல்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நமிடம்
8 பேர்
  1. கத்தரிக்காய் 3/4 கி
  2. பெரிய சைஸ் வெங்காயம் 1
  3. ம.தூள் 1/2 டீ ஸ்பூன்
  4. தனி மி.தூள் 1 ஸ்பூன்
  5. தனியா தூள் 1 டீ ஸ்பூன்
  6. மிளகு, சீரகத்தூள் 1 டீ ஸ்பூன்
  7. உப்பு ருசிக்கு
  8. தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
  9. சீரகம் 1 டீ ஸ்பூன்
  10. சோம்பு 1 டீ ஸ்பூன்
  11. வெந்தயம் 1/4 டீ ஸ்பூன்
  12. பூண்டு விழுது 1 டீ ஸ்பூன் (இடித்தது)
  13. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  14. ந.எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  15. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கத்தரிக்காயை சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போடவும்.

  3. 3

    வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

  4. 4

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் 3 டேபிள் ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு போட்டு வெடித்ததும், வெந்தயம், சீரகம், சோம்பு, போட்டு, வறுபட்டதும், இடித்த பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

  5. 5

    அடுத்து, வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், போட்டு, கண்ணாடி பதத்திற்கு வறுக்கவும்.

  6. 6

    பின், கத்தரிக்காய் போட்டு ஒன்று சேர நன்கு வறுபட்டதும், அடுப்பை நிறுத்தி விட்டு இறக்கவும்.

  7. 7

    இறக்கினதும், பௌலுக்கு மாற்றவும்.

  8. 8

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*கத்தரிக்காய் வறுவல்*தயார்.இதனை செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.

  9. 9

    குறிப்பு:- இந்த கத்தரிக்காய் வறுவல், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes

More Recommended Recipes