* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது.

* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)

இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
10 பேர்
  1. இடியாப்ப மாவு (அ) பச்சரிசி மாவு 2 கப்
  2. ஊற வைத்த க.பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  3. உளுந்து மாவு 4 டீ ஸ்பூன்
  4. தனி மிளகாய் தூள் 1 1/2 டீ ஸ்பூன்
  5. பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன்
  6. வெண்ணெய் (அ) உருக்கிய நெய் 1 டீ ஸ்பூன்
  7. உப்பு ருசிக்கு
  8. நறுக்கிய கறிவேப்பிலை 2 ஸ்பூன்
  9. தண்ணீர் தேவையான அளவு
  10. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேறும் கடாயில் 2 டேபிள் ஸ்பூன் முழு உளுந்தை கருகாமல் நன்கு சிவக்க வறுத்து ஆறினதும், மிக்ஸியில் மைய அரைக்கவும்.

  3. 3

    பிறகு அரிசிமாவையும் நன்கு வறுத்து ஆறினதும் பெரிய பௌலில் போடவும்.

  4. 4

    க.பருப்பை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.

  5. 5

    அரிசி மாவுடன், 4 ஸ்பூன் உளுந்து மாவு, தனி மி.தூள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்,வெண்ணெய், உப்பு போட்டு நன்கு கலந்து தண்ணீரை தெளித்து பிசைந்ததும், ஊறின க.பருப்பை தண்ணீரை வடித்துவிட்டு சேர்த்து கலக்கவும்.

  6. 6

    எண்ணெய் மிதமான சூட்டில் வைத்து காய்ந்ததும், பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, மாவை மெல்லியதாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  7. 7

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*கிரிஸ்பி தட்டை* தயார். செய்து பார்த்து என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes