மிளகு குழம்பு

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மிளகு - 2 ஸ்பூன்
  2. சீரகம் - 1 ஸ்பூன்
  3. சோம்பு - 1 ஸ்பூன்
  4. கசகசா - 1 ஸ்பூன்
  5. தேங்காய் - 3 ஸ்பூன்
  6. சின்ன வெங்காயம் - 50 கிராம்
  7. பூண்டு - 10 பல்
  8. கருவேப்பிலை - சிறிதளவு
  9. கடுகு - 1/2 ஸ்பூன்
  10. வற்றல் -1
  11. புளி - பெரிய நெல்லி அளவு
  12. வற்றல்தூள் - 1 ஸ்பூன்
  13. மல்லிதூள் - 1 ஸ்பூன்
  14. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  15. உப்பு - தேவையான அளவு
  16. நல்லெண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் மிளகு, சீரகம், சோம்பு,கசகசா சேர்த்து வறுக்கவும்.

  2. 2

    பாதி வறுபட்டதும் தேங்காய் துருவல் சேர்த்து சிறுதீயில் வைத்து நன்கு சிவக்க வறுக்கவும்

  3. 3

    ஆறியபின் நன்கு அரைத்துக்கொள்ளவும்

  4. 4

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.

  5. 5

    பின் நறுக்கிய சின்னவெங்காயம், பூண்டு சேர்க்கவும்.

  6. 6

    வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த மசாலா, வற்றல் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

  7. 7

    பின் புளிகரைசல் சேர்த்து நன்கு கொதித்ததும் சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரியவும் இறக்கவும்.

  8. 8

    மிகவும் ருசியான மிளகு குழம்பு தயார்

  9. 9

    ருசியாக இருப்பது மட்டுமின்றி, ஜலதோஷம், இருமலுக்கு அருமருந்து.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes

More Recommended Recipes