காய்கறி கதம்ப சாதம்

Subhashni Venkatesh
Subhashni Venkatesh @cook_16039991

மதிய உணவிற்கு ஏற்ற சத்தான ஒரு சாதம். செய்வதும் சுலபம். கோவில்களில் செய்யப்படும் கதம்ப சாதங்களில் வெங்காயம் சேர்ப்பது இல்லை. நாம் வீட்டில் செய்யும் பொழுது வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. அரிசி 2 கப்
  2. துவரம் பருப்பு 1/2 கப்
  3. பெரிய நெல்லிக்காய் அளவு புளி
  4. உப்பு தேவையான அளவு
  5. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  6. வெல்லம் 2 தேக்கரண்டி
  7. வறுத்து பொடிக்க
  8. தனியா / மல்லி 1 1/2 மேஜைகரண்டி
  9. கடலைப் பருப்பு 1 மேஜைகரண்டி
  10. மிளகு 1/2 தேக்கரண்டி
  11. மிளகாய் வற்றல் 5
  12. வெந்தயம் 1/4 தேக்கரண்டி
  13. காய்கறிகள்:
  14. சின்ன வெங்காயம், முருங்கைகாய், கத்தரிக்காய், பீன்ஸ், காரட்
  15. கீறிய பச்சை மிளகாய் 2
  16. தாளிக்க:
  17. நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  18. கடுகு, உளுத்தம் பருப்பு
  19. பெருங்காயம்
  20. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள சாமான்களை சிவக்க வறுத்து, ஆறியவுடன் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    புளியை கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரிசி, பருப்பை சேர்த்து களைந்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    குக்கரை அடுப்பில் வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.

  5. 5

    காய்ந்ததும் காய்கறிகள், பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கவும்.

  6. 6

    பின் மஞ்சள் போடி மற்றும் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்க்கவும்.

  7. 7

    புளி கரைசல் மற்றும் 6 கப் நீர் சேர்க்கவும். தேவையான உப்பை போடவும். வெல்ல தூளையும் போடவும்.

  8. 8

    கொத்தி வந்தவுடன் அரிசி துவரம் பருப்பை போட்டு, கிளறி மூடவும்.

  9. 9

    நான்கு அல்லது ஐந்து விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

  10. 10

    குக்கரை திறந்தவுடன் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெயில் கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து கிளறி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Subhashni Venkatesh
Subhashni Venkatesh @cook_16039991
அன்று

Similar Recipes