தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. சேப்பங்கிழங்கு- 2
  2. கத்தரிக்காய்-2
  3. பெரிய வெங்காயம்-1
  4. தக்காளி-2
  5. துவரம் பருப்பு- 50 கிராம்
  6. சாம்பார் தூள்-1 டேபிள் ஸ்பூன்
  7. (அல்லது
  8. மிளகாய் தூள்-1/2 டீ ஸ்பூன்
  9. மல்லித் தூள்- 1 டேபிள் ஸ்பூன் )
  10. மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  11. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  12. உப்பு- தேவையான அளவு
  13. புளி கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்
  14. கொத்தமல்லி இலை- தேவைப்பட்டால்
  15. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
  16. துருவிய தேங்காய்- 1/4 கப்
  17. சீரகம்- 1/4 டீ ஸ்பூன்
  18. தாளிக்க தேவையான பொருட்கள்:
  19. தேங்காய் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  20. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  21. வெந்தயம்-1/4 டீ ஸ்பூன்
  22. சீரகம் -1/4 டீ ஸ்பூன்
  23. கருலேப்பில்லை -ஒரு கொத்து
  24. நறுக்கிய வெங்காயம்- 1 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    சேப்பங்கிழங்கை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்

  3. 3

    துவரம் பருப்பை சுத்தம் செய்து கொள்ளவும்

  4. 4

    கத்தரிக்காய், பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்

  5. 5

    ஒரு குக்கரில் துவரம் பருப்பு, நறுக்கிய சேப்பங்கிழங்கு, பெரிய வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கிளறவும்.

  6. 6

    மேலும் புளி கரைசல் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  7. 7

    பின்பு விசில் அடங்கியதும் மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

  8. 8

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம்  பொடித்து கருலேப்பில்லை, வெங்காயம் சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்த்து நன்கு கிளறவும்.

  9. 9

    தேவைப்பட்டால் கொத்தமல்லி இலை களை தூவி கிளறவும்.

  10. 10

    சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes