கீரைத்தண்டு முருங்கை சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
- 2
சுரைக்காய் தோல் சீவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
தண்டுகீரையின் இலைகளை எடுத்து விட்டு, தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 4
முருங்கைகாய், பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்
- 5
துவரம் பருப்பை சுத்தம் செய்து கொள்ளவும்
- 6
ஒரு குக்கரில் துவரம் பருப்பு, நறுக்கிய சுரைக்காய், கீரைத்தண்டு, முருங்கைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், உப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கிளறவும்.
- 7
மேலும் புளி கரைசல் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 8
பின்பு விசில் அடங்கியதும் மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 9
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம், வெந்தயம் பொடித்து கருலேப்பில்லை, வெங்காயம் சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்த்து நன்கு கிளறவும்.
- 10
தேவைப்பட்டால் கொத்தமல்லி இலை களை தூவி கிளறவும்.
- 11
சூடான சாதத்துடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கை சாம்பார்
நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கை சாம்பார்#mehuskitchen# என்பாரம்பரியசமையல். Mumtaj Sahana -
-
-
-
*முருங்கை கீரை, வேர்க்கடலை பிரட்டல்*
முருங்கை இலையில், இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கை இலையின் காம்பை ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் வலிகள் குறையும். ரத்தச் சோகை வராமல் தடுக்கின்றது. வேர்க்கடலை மூளையின் வளர்ச்சிக்கும், இதயத்தை பாதுகாப்பதற்கும், பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
-
தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)
முருங்கைக்காயுடன் மசாலா, தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்த ஒரு குழம்பு தான் இது. நல்ல சுவையும், நல்ல மணமும் கொண்டது.#Cocount Renukabala -
-
-
சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்.. Muniswari G -
முருங்கை காய் சாம்பார்
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். முருங்கைக்காய் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். குக்கரில் துவரம்பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மஞ்சள்தூள், சேர்த்து ஒரு விசில் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.குக்கரில் விசில் போனதும் திறந்து நன்கு கரண்டியால் கிளறிவிடவும். இப்போது பருப்பு முக்கால் பதமாக வெந்து இருக்கும். தனியே ஒரு பாத்திரத்தில் அரிசி கலைந்த தண்ணீர் 3 முறை தண்ணீர் எடுத்து கொள்ளவும் (மிகவும் சத்து உள்ளது. அதனால் தினமும் அரிசி கலைந்த தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தலாம்)அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். நன்கு கொதி வந்ததும் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். அடிபிடிக்காமல் கிளறி விடவும். நறுக்கிய முருங்கை காயை கழுவி தண்ணீர் வடிய விடவும். பிறகு கொதிக்கும் பருப்பில் சேர்க்கவும். காய்க்கு தேவையான உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் மூடி வைக்கவும். முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் சாம்பார் பொடியும், மிளகாய் தூளும் சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போது குழம்புக்கு தேவையான அளவு உப்பு மீண்டும் சேர்க்கவும். முருங்கைக்காய் முழுதும் வெந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். புளிகரைசலை கரைத்து சாம்பாரில் சேர்க்கவும். தாளிக்க ஒரு சிறிய கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து நன்கு பொறிய விடவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாம்பாரில் சேர்க்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் சாதம், இட்லி, தோசைக்கு ஏற்றது. வேறு காய்கள் சேர்க்காமல் தனியே முருங்கைக்காய் மட்டும் சேர்த்து சாம்பார் வைத்தால் ருசி அபாரம். Laxmi Kailash -
-
-
-
More Recipes
கமெண்ட்