கத்தரிக்காய் சட்னி

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#சட்னிமற்றும்டிப்ஸ்

கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பேருக்கு
  1. 2 - கத்தரிக்காய்
  2. 1- தக்காளி
  3. 2 மேசைக்கரண்டி - தேங்காய் துருவல்
  4. 3- மிளகாய் வத்தல்
  5. சிறு துண்டு புளி
  6. 1 மேசைக்கரண்டி - கறுப்பு உளுந்தம் பருப்பு
  7. 1 ஆர்க்கு - கறிவேப்பிலை
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1/2 தேக்கரண்டி - கடுகு
  10. 3 தேக்கரண்டி - எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய் வத்தல், கறுப்பு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை வறுத்து எடுக்கவும்.

  2. 2

    நறுக்கிய கத்தரிக்காய் துண்டுகள் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.

  3. 3

    தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் ஆறவைக்கவும்.

  4. 4

    மிக்சி ஜாரில் தேங்காய் துருவல், உப்பு, புளி சேர்த்து வதக்கி ஆறியவற்றையும் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

  5. 5

    கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes