சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)

#Cookerylifestyle
சிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது.
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyle
சிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது.
சமையல் குறிப்புகள்
- 1
சிகப்பு அவல் எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
வெங்காயம்,காய்கறிகள் எல்லாம் நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 4
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின்னர் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி,உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
- 6
அவலை தண்ணீரில் நன்கு கழுவி பிழிந்து தண்ணீரை இல்லாமல் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
- 7
காய்கறிகள் நன்கு வெந்ததும் நன்கு கலந்து தயாராக உள்ள அவலை சேர்த்து கலக்கவும்.
- 8
பின்பு எழுமிச்சை சாறு பிழிந்து சேர்க்கவும்.
- 9
தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 10
கடைசியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.
- 11
இப்போது மிகவும் சுவையான ஆரோக்கியமான,சத்தான உணவான சிகப்பு அவல் காய்கறி உப்புமா சுவைக்கத்தயார்.
- 12
தயாரான உப்புமாவை எடுத்து பரிமாறும் பௌலில் சேர்த்து மல்லி இலை தூவி பரிமாறவும்.
Top Search in
Similar Recipes
-
Red bean poha
#nutrient1சிகப்பு பீன்ஸில் புரதம் 48%அதிகம் உள்ளது. புரதம் மட்டும்இல்லாமல் இரும்பு சத்தும் அதிகம் உள்ளது. கால்சியம் 17% உள்ளது. விட்டமின் B16 மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. பாஸ்பரஸ் பொட்டாசியம் கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது. அவலில் 6% வரை புரதம் உள்ளது. எளிதில் ஜீரணமாகக் கூடியது நார்ச்சத்து அதிகம் உள்ளது. சத்துக்கள் மட்டுமல்லாமல் சுவையான உணவும் கூட. Meena Ramesh -
சிகப்பு அவல் பேரிச்சபழம் கொழுக்கட்டை (Sivappu aval peritchampzham kolukattai recipe in tamil)
#arusuvai3 சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும். BhuviKannan @ BK Vlogs -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#Breakfast உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அவல் போன்ற உணவை உட்கொள்ளலாம். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இது இரும்பு சத்து நிறைந்த உணவு ஆகும். Food chemistry!!! -
சிகப்பு அவல் கேரட் கிச்சடி
#AsahikaseiIndia #No - oil Recipesசிகப்பு அவல் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு.கொழுப்பை குறைக்க கூடியது.ஒரு பாத்திரத்தில் சிகப்பு அவல் ஒரு கப் எடுத்துக் கொண்டு அதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து அதில் எட்டு மணிநேரம் ஊறவைத்த |வேக வைத்த நிலக்கடலையை சேர்த்து அதில் தக்காளி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து அந்த கலவை மற்றும் சீரகத்தூள், மஞ்சள் தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் கேரடை துண்டுகளாக நறுக்கி, தேங்காய் துருவல் அதை சிகப்பு அவல் கலவையோடு சேர்த்து மல்லி தூவி பரிமாறவும்.இதை அடுப்பில் வைக்காமல் நாம் இப்படி செய்து சாப்பிடும் போது இதன் முழு நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் சக்தி தரும் உணவாக இருக்கும்.இதை டிபனாகவோ அல்லது மாலை ஸ்னாக்ஸ் ஆகவோ சாப்பிட்டு பயன் பெறுவோம் தோழிகளே 👍😊 Yasmeen Mansur -
-
ஹோட்டல் சுவையில் பூரி மசாலா
#myownrecipes.உருளைக்கிழங்கில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ளது இதில் வைட்டமின் சி பாஸ்பரஸ் பொட்டாசியம் ஜிங்க் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. Sangaraeswari Sangaran -
-
சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை (Sivappu aval inippu kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். Siva Sankari -
-
கார அவல் (kaara aval recipe in Tamil)
#அவசர#Fitwithcookpad அவல் எளிதில் ஜீரணம் ஆகிவிடும் .குழந்தைகளுக்கு ஏற்றது .இரும்பு சத்து நிறைந்தது . Shyamala Senthil -
காய்கறி ஓட்ஸ் உப்புமா (Kaaikari Oats Upma Recipe in Tamil)
#Nutrient3ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. Shyamala Senthil -
புளி அவல் (Tamarind flattened rice)
அவல் வைத்து நிறைய உணவு செய்கிறோம். இப்போது காரசாரமான புளி அவல் செய்து பார்ப்போம்.#ONEPOT Renukabala -
ஜவ்வரிசி அவல் உப்புமா
#carrot#Goldenapron3#bookகாய்கறிகள் ஜவ்வரிசி அவல் சேர்த்து ஒரு மாற்றமாக உப்புமா செய்தேன். சத்துக்கள் நிறைந்த உப்புமா. Shyamala Senthil -
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
செட்டிநாடு காய்கறி புலாவ் /Chettinad Vegetable Pulao
#Carrot#Bookதினமும் சாதம் சாம்பார் ரசம் என்று சமைத்து சாப்பிட்டு வர ,ஒரு மாற்றமாக இன்று செட்டிநாடு காய்கறி புலாவ் செய்தேன். செய்வது சுலபம் .இதில் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி சேர்த்து இருப்பதால் சத்துக்கள் நிறைந்த உணவு .😋😋 Shyamala Senthil -
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#poojaஅவல் உப்புமா வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் மட்டும் சேர்த்து செய்த உப்புமா.எலுமிச்சை பழ சாறு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளியில் ஊற வைத்தும் செய்யலாம். Meena Ramesh -
அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)
அவலும், ராகி மாவும் சேர்த்து, அத்துடன் காய்கறிகள், தேங்காய் துருவலும் சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், சத்துக்கள் நிறைத்தும் இந்த அவல் ராகி ரொட்டி மிகவும் சுவையாக உள்ளது.#CF6 Renukabala -
லெமன் ரைஸ் (Lemon rice Recipe in Tamil)
#Nutrient2 #book எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. Hema Sengottuvelu -
-
எலுமிச்சை அவல் உப்புமா(lemon aval)🍋
#pms family குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் இரும்பு சத்து நிறைந்த எலுமிச்சை அவல் உப்புமா செய்ய முதலில் 200 கிராம் அவல் எடுத்து தண்ணீர் தெளித்து 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.எலுமிச்சைஅரை பழத்தை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு எண்ணெயில் போட்டு தாளித்து பிறகு வரமிளகாய்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின் அதனுடன் முந்திரி அல்லது வேர் கடலை சேர்த்து கிளறி விடவும்.பின் பிழிந்து வைத்துள்ள அரை எலுமிச்சை பழம் சாற்றை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும் பின் அதனுடன் ஊற வைத்துள்ள அவள் சேர்த்து கிளறி விட்டு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்..சூப்பரான சுவைமிக்க எலுமிச்சை அவல் உப்புமா தயார்.👌👌 Bhanu Vasu -
-
வாழை தண்டு பொரியல் (plantain stem fry recipe in tamil)
வாழை தண்டு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதில் விட்டமின் பீ,பொட்டாசியம்,டையூரிக் போன்ற சத்துக்கள் உள்ளது. வாழை தண்டு ஜுஸ் சிறுநீர் கற்களை கரைக்கவும், உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் கொண்டது. Renukabala -
சிகப்பு அவல் அல்வா (Sivappu aval halwa recipe in tamil)
#nutrient3 #familyஅவல் இரும்பு சத்து நிறைந்த உணவு MARIA GILDA MOL -
பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)
#nutrient2விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது. Meena Ramesh -
பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)
அவலுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் எடை குறைய மிகவும் உதவும்.#breakfast Renukabala -
மக்காச்சோள உப்புமா(corn upma recipe in tamil)
மக்காச்சோளம் ஒரு ஆரோக்கியமான உணவாகும்.இவற்றில் நியாசின், தயமின், விட்டமின் சி ,விட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட் இது போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ளது. Lathamithra -
More Recipes
கமெண்ட் (2)