ஜவ்வரிசி அவல் உப்புமா

#carrot
#Goldenapron3
#book
காய்கறிகள் ஜவ்வரிசி அவல் சேர்த்து ஒரு மாற்றமாக உப்புமா செய்தேன். சத்துக்கள் நிறைந்த உப்புமா.
ஜவ்வரிசி அவல் உப்புமா
#carrot
#Goldenapron3
#book
காய்கறிகள் ஜவ்வரிசி அவல் சேர்த்து ஒரு மாற்றமாக உப்புமா செய்தேன். சத்துக்கள் நிறைந்த உப்புமா.
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் 2 தோல் சீவி கழுவி துருவி வைக்கவும்.குடை மிளகாய் 1/2 கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.பெரிய வெங்காயம் 2 தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய் 1 இஞ்சி 1 துண்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.கொத்தமல்லி தழை கழுவி வைக்கவும்.
- 2
கருவேப்பிலை கழுவி வைக்கவும்.நைலான் ஜவ்வரிசி1/2 கப் கழுவி 4 மணி நேரம் ஊறவிடவும்.கெட்டி அவல் 1 கப் கழுவி 1/2 மணி நேரம் ஊற விடவும்.
- 3
வறுத்த வேர்க்கடலை 1/4 கப் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து வைக்கவும்.கடாயில் 3 டேபிள் ஸ்பூன் ஆயில் சேர்த்து காய்ந்ததும் சீரகம் 1 டீஸ்பூன்,1 சிட்டிகை பெருங்காயம் சேர்த்து,
- 4
கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி துருவிய கேரட், நறுக்கிய குடை மிளகாய்,அரைத்த இஞ்சி பச்சைமிளகாய் விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கி,மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி ஊறிய நைலான் ஜவ்வரிசி சேர்த்து,
- 5
கலக்கி 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து ஊறிய அவல் சேர்த்து கிளறவும்.
- 6
அவல் நன்கு சூடான பிறகு எலுமிச்சை பழம் சாறு 1/2 பிழிந்து கலக்கி, பொடித்த வேர்க்கடலை பொடியை தூவி கலக்கி விடவும்.
- 7
நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.சுவையான சத்தான ஜவ்வரிசி அவல் உப்புமா ரெடி.பொட்டுக்கடலை சட்னி தொட்டு சாப்பிடலாம்.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தக்காளி அவல் (Tomato puffed rice)
தக்காளி அவல் செய்வது மிகவும் சுலபம். இது மகாராஷ்ராவில் மிகவும் பேமஸ் டிஸ். Renukabala -
பாரம்பரிய அவல் உப்புமா
#GA4 #Week5 #upmaபாரம்பரிய அவல் உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
ஜவ்வரிசி உப்புமா /Sago Upmma
#கோல்டன்அப்ரோன்3#Lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை. நைலான் ஜவ்வரிசி ,பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து காலையில் செய்தேன் .சுவை அதிகம். உணவு முறையில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த உப்புமாவை செய்து சுவைத்திடலாம். Shyamala Senthil -
-
-
புளி அவல் உப்புமா(puli aval upma recipe in tamil)
#qk - அவல்புளி சேர்த்து செய்யும் அவல் உப்புமா மிகவும் சுவையானது.. விருந்தினார்கள் வந்தால் சட்டுப்புட்டுன ஒரு நொடியில் செய்து குடுத்து அசத்தலாம்... Nalini Shankar -
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala -
-
அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋 Shyamala Senthil -
புளி அவல் (Tamarind flattened rice)
அவல் வைத்து நிறைய உணவு செய்கிறோம். இப்போது காரசாரமான புளி அவல் செய்து பார்ப்போம்.#ONEPOT Renukabala -
-
-
சேமியா உப்புமா
எளிதில் செய்யக்கூடிய காய்கறிகள் கலந்த சுவையான உப்புமா #breakfast Lakshmi Sridharan Ph D -
பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)
அவலுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் எடை குறைய மிகவும் உதவும்.#breakfast Renukabala -
அவல் நட்ஸ் ஸ்மூத்தி
#cookwithfriends#shyamaladeviசர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது. Sowmya sundar -
ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast Sundari Mani -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#poojaஅவல் உப்புமா வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் மட்டும் சேர்த்து செய்த உப்புமா.எலுமிச்சை பழ சாறு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளியில் ஊற வைத்தும் செய்யலாம். Meena Ramesh -
ஜவ்வரிசி உப்புமா (Javvarisi upma recipe in tamil)
#GA4# WEEK 5# UPPMA ஜவ்வரிசியில் உப்புமா நன்றாக இருக்கும். #GA4 # WEEK 5 # UPPMA Srimathi -
கோதுமை ரவை உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1லாக் டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் .வெளியே செல்ல முடியாத சூழல் .மளிகை சாமான் குறைவாகவே உள்ளது .இட்லி மாவு அரைக்க வேண்டும் .இட்லி அரிசி வாங்க வேண்டும் .ஆகையால் நான் வீட்டில் உள்ள கோதுமை ரவையில் உப்புமா செய்தேன் . Shyamala Senthil -
Wheat Chila /கோதுமை சில்லா
#Immunity#Goldenapron3கோதுமை மாவுவில் தாளித்து தோசை செய்து இருப்போம்.கோதுமை சில்லா என்பது வெங்காயம் தக்காளி குடைமிளகாய் சேர்த்து செய்வது.சுவையான வித்யாசமான தோசை . Shyamala Senthil -
அவல் 👌எலுமிச்சை உப்புமா👌
# PM's family அவல் எலுமிச்சை உப்புமா செய்ய முதலில் அவல் ஒருகப் எடுத்து சுத்தம் செய்து தண்ணீரில் நன்கு அலசி தண்ணீரை வடித்து விட்டு ஐந்து நிமிடம் வைக்கவும் கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும்கடுகு உழுந்து கடலைபருப்பு தாளித்து கறிவேப்பிலை வரமிளகாய் கிள்ளி போட்டு நறுக்கிய பச்சமிளகாய் தாளித்து முந்திரி வேர்கடலை சேர்த்து பிரவுன்கலர் ஆனவுடன் மஞசள் உப்பு பெருங்காயதூள் கலந்து லெமன் பிழிந்து ஊறவைத்து தண்ணீர் வடித்த அவல் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கினால் சூப்பராண எலுமிச்சை அவல் உப்புமா. மல்லி இழை தூவி தயார் Kalavathi Jayabal -
எலுமிச்சை அவல் உப்புமா(lemon aval)🍋
#pms family குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் இரும்பு சத்து நிறைந்த எலுமிச்சை அவல் உப்புமா செய்ய முதலில் 200 கிராம் அவல் எடுத்து தண்ணீர் தெளித்து 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.எலுமிச்சைஅரை பழத்தை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு எண்ணெயில் போட்டு தாளித்து பிறகு வரமிளகாய்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின் அதனுடன் முந்திரி அல்லது வேர் கடலை சேர்த்து கிளறி விடவும்.பின் பிழிந்து வைத்துள்ள அரை எலுமிச்சை பழம் சாற்றை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும் பின் அதனுடன் ஊற வைத்துள்ள அவள் சேர்த்து கிளறி விட்டு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்..சூப்பரான சுவைமிக்க எலுமிச்சை அவல் உப்புமா தயார்.👌👌 Bhanu Vasu -
🍲🍲ராஜ்மா அவல்🍲🍲 (Rajma aval recipe in tamil)
#pooja இனிப்புடன் ஆரம்பித்த நவராத்திரிக்குபுளிப்பும் காரமும் நிறைந்த ராஜ்மா அவல் Hema Sengottuvelu -
-
112.அவல் உப்புமா
அவல் அரிசி அடித்தது மற்றும் சர்க்கரை மற்றும் பால் அல்லது பருப்பு மற்றும் தேங்காய் ஆகியவற்றால் கலந்த கலவையாகும் பல ஒளி பிரட்ஃபாட்கள் செய்ய பயன்படுத்தலாம்.அவல் உப்புமா ஒரு எளிதான செய்முறையை மற்றும் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு செய்யும். Meenakshy Ramachandran -
-
-
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
வெல்ல அவல்#GA4#WEEK15#Jaggery
#GA4#WEEK15#Jaggeryபெருமாளுக்கு பிடித்தநைவேத்தியம் வெல்ல அவல் Srimathi
More Recipes
கமெண்ட்