கேஎப்சி ஸ்டைல் வெஜ் ஸ்ட்ரிப்ஸ்

சுவையான மற்றும் சத்தான மாலை நேர தின்பண்டம் கேஎப்சி பாணியில் வீட்டிலேயே செய்து மகிழுங்கள்.
கேஎப்சி ஸ்டைல் வெஜ் ஸ்ட்ரிப்ஸ்
சுவையான மற்றும் சத்தான மாலை நேர தின்பண்டம் கேஎப்சி பாணியில் வீட்டிலேயே செய்து மகிழுங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்கறிகள் அனைத்தையும் குக்கரில் வேக வைத்து தண்ணீரை விட்டும் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
கேரட் மற்றும் உருளை கிழங்கை மசித்து அதோடு பட்டாணி ஸ்வீட் கார்ன் வத்தல் தூள் கார்ன் ப்ளார் ஹெர்ப் தூள் இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
- 3
எலுமிச்சை அளவில் கலவையை எடுத்து உருளை வடிவில் பிடிக்கவும்.
- 4
மைதா மற்றும் கார்ன் ப்ளாரை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து அதில் தோய்த்து எடுக்கவும்.
- 5
மற்றொரு தட்டையில் கார்ன் ப்ளாக்ஸ் மற்றும் ப்ரட் க்ரம்ஸை ஒன்றாய் கலந்து அதிலே பிரட்டி எடுக்கவும்.
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி அதிலே கவனமாய் போட்டு மிதமான தணலில் பொன்னிறமாக பொறித்தெடுக்கவும். சூடாக சாஸூடன் சாப்பிடவும்.
Similar Recipes
More Recipes



கமெண்ட்