முருங்கைக்காய் ரசம்
முருங்கைக்காய், பருப்பு சேர்த்து செய்த ரசம்.
சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்பை குக்கரில் 4 விசில் வேக வைத்து மசிக்கவும்.
- 2
வாணலியில் முருங்கைக்காயுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். பின்னர் வெந்த முருங்கையின் சதை பகுதியை மட்டும் எடுத்து, அதை லேசாக மசித்து வைக்கவும்.
- 3
மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ளதை சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
- 4
ஒரு வாணலியில் புளிக்கரைசல், மசித்த பருப்பு, அரைத்த விழுது, 1 கப் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விடவும்.
- 5
பின்னர், மசித்த முருங்கை சதை சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- 6
மற்றொரு கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை வைத்து தாளிக்கவும். இதை கொதிக்க வைத்த ரசத்தில் ஊற்றவும்.
- 7
அடுப்பை அணைத்து விட்டு, மல்லித்தழை அல்லது தண்டு சேர்த்து, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 8
சுவையான முருங்கைக்காய் ரசம் தயார். இதை சாதத்துடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்