நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)

நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நெய் தேங்காய் சாதம் செய்ய - முதலில் பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து ஏலக்காய் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை சென்றவுடன் தக்காளி சேர்த்து கிளறவும்.பின்னர் இதனுடன் கேரட் சேர்த்து கிளறவும்
- 3
மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும். பின்னர் சிறதளவு தயிர் சேர்த்து 5 நிமிடம் கிளறவும்
- 4
நன்றாக கிளறிய பின் மல்லி தழை மற்றும் புதினா சேர்த்து கிளறி தண்ணீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொள்ளவும்.தண்ணீர் கொதித்த பின்னர் அரிசி சேர்த்து கிளறி பாத்திரத்தை மூடி வைக்கவும்
- 5
தண்ணீர் வற்றி அரிசி நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதனை லேசாக கிளறி சிறிது நேரம் மூடி வைத்து எடுத்தால் சுவையான நெய் தேங்காய் சாதம் தயார்.
- 6
தக்காளி தொக்கு::கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து சேர்த்து தாளிக்கவும். பின்னர் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 7
வதக்கிய பின்னர் தக்காளி சேர்த்து மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து கிளறவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து தக்காளியை வேக விடவும்.15-20நிமிடம் பின் மல்லி தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான தக்காளி தொக்கு தயார்
Similar Recipes
More Recipes













கமெண்ட்