பிஸிபேலாபாத் (bisibelabath recipe in Tamil)
# goldenapron2
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் பாசிப்பருப்பு துவரம்பருப்பு ஐ கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும்
- 2
நன்கு கொதிக்கும் போது மஞ்சள் தூள் சிறிது எண்ணெய் விட்டு நன்கு கிளறவும்
- 3
காய்கறிகள் மற்றும் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை தனித்தனியாக பொடியாக நறுக்கி வைக்கவும்
- 4
இஞ்சி பூண்டு ஆகியவற்றை இடித்து வைக்கவும்
- 5
புளியை ஊற வைத்து பின் கரைத்து வடிகட்டி வைக்கவும்
- 6
வாணலியில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்
- 7
பின் இடித்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
- 8
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 9
பின் நறுக்கிய காய்கறிகள் சேர்க்கவும்
- 10
கூடவே தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 11
பத்து நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் மூடி வைத்து வேக விடவும்
- 12
பின் பிஸிபேலாபாத் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
- 13
காய்கறிகள் முக்கால் பாகம் வரை வெந்ததும் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கிளறவும்
- 14
அரிசி மற்றும் பருப்பை நன்கு குழைய வேகவிடவும்
- 15
பின் வதக்கிய காய்கறிகளை நன்கு கொதிக்க விட்டு குழைய வேகவைத்த சாதம் மற்றும் பருப்புடன் சேர்த்து நன்கு கிளறவும்
- 16
பின் தனியாக சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை மற்றும் நிலக்கடலை சேர்த்து வறுத்து வெந்து கொண்டிருக்கும் சாதத்துடன் கொட்டவும்
- 17
பின் மீண்டும் அதே கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரி சேர்த்து வறுக்கவும்
- 18
இதையும் சாதத்துடன் கொட்டவும்
- 19
பின் எல்லாம் சேர்ந்து நன்கு கிளறி கொதிக்க விட்டு பெருங்காயத்தூள் மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 20
இப்போது எல்லாத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
- 21
மேல் சூடான நெய் விட்டு சுடச்சுட பரிமாறவும்
- 22
சுவையான மணமான பிஸிபேலாபாத் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- கல்கண்டு பொங்கல்/கற்கண்டு சாதம் (kalkandu pongal recipe in tamil)
- கர்நாடக ஈருளி பூண்டு சட்னி (poondu chutni recipe in Tamil)
- பிரெட் ஆம்லெட் (bread omelette recipe in Tamil)
- சாக்லேட் வைட் பைனாப்பிள் கேசரி பாத். (chocolate white pineapple kesari bath recipe in tamil)#book
- பிஸிபேளாபாத் (bisibelabath recipe in Tamil)












































கமெண்ட்