#goldenapron3 ஸ்மோகி பன்னீர் மட்டர் மசாலா
சமையல் குறிப்புகள்
- 1
ஊறவைக்க :
1கப் தயிரில் மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களை சேர்க்கவும் பின்பு பன்னீர், குடைமிளகாய் சேர்த்து கலந்து விடவும். ஒரு சிறிய கிண்ணம் வைத்து நன்கு சூடாக்கிய கரி துண்டை வைத்து 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு 1ஸ்பூன் சோம்பு போட்டு புகை வரும்போது மூடி வைக்கவும். நன்கு புகையுடன் கலந்து ஒரு புதுவிதமான சுவையில் இருக்கும். - 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், அன்னாசி, சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும், இஞ்சி பூண்டு, தக்காளி, குடைமிளகாய், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும். நன்கு வெந்ததும் ஸ்மோகி செய்து வைத்த பன்னீர் அதனுடன் சேர்த்து நன்கு கிளறி ஒரு 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். பிறகு சூடாக சப்பாத்தி /ரொட்டியுடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11508192




கமெண்ட்