காய்கறி பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
கேரட் உருளைக்கிழங்கு காளிபளார் ஐ பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 3
அடிகனமான பாத்திரத்தில் நெய் எண்ணெய் விட்டு சூடானதும் மெல்லியதாக நீள்வாக்கில் வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி மசாலா தூள் சேர்த்து வதக்கி தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி வெங்காயம் நன்கு வதங்கியதும் காய்கள் கொத்தமல்லி இலை மிளகாய் புதீனா தயிர் தேவையான அளவு உப்பு சேர்த்து காய்களை வேக விடவும்.
- 5
10 நிமிடம் காய் வெந்ததும். தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
நன்கு கொதித்து வரும்போது அரிசி சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். பின்னர் தீயை சீம்மில் வைத்து அரிசி வேக விடவும்.
- 7
தண்ணீர் வற்றி அரிசி நன்கு வெந்ததும் நன்றாக பிரட்டி விட்டு குறைந்த தீயில் 10 நிமிடம் தம் போட்டு அடுப்பை அணைக்கவும்.
- 8
காய்கறி பிரியாணி தயார். வெள்ளெரிக்காய் ராய்தா உடன் பரிமாறவும்..
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்