கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)

வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் போட்டிக்காக நான் பாலும் முட்டையும் சேர்த்து செய்த ரெசிப்பி இது ,ஆவியில் வேகவைத்து செய்யகூடிய இதை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ,குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு இது,பாலில் வைட்டமின் B1,B2,B3,B5,B6,B12,மற்றும் C வைட்டமின் இருப்பதாலும் முட்டையில் வைட்டமின் A ,D,C,B -6 இருப்பதாலும் இதை நான் பதிவிடுகிறேன்#nutrient2

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் சீனி சேர்த்து ஸ்டவ்வில் வைக்கவும்,மிதமான சூட்டில் சீனி கரையும்.
- 2
சீனி கரைந்து தேன் கலர் வந்ததும் அதில் 2 டீஸ்பூன் சூடான வெந்நீர் சேர்த்து கலக்கி அதை புட்டிங் செய்யும் பாத்திரத்தில்ஊற்றி ஆறவிடவும்.
- 3
இப்போது ஒரு குக்கரில் 3 கப் நீர் ஊற்றி ஸ்டவ்வில் வைக்கவும்,ஸ்டவ் மிதமான தீயில் எரியவேண்டும்
- 4
ஒரு மிக்சிங் பௌலில் 2 முட்டை 1/2 கப் சீனி,பால் பௌடர் சேர்த்து நன்றாக கலக்கவும்
- 5
மிக்ஸ் செய்து வைத்த முட்டையோடு பாலையும் வெண்ணிலா எசன்ஸையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்
- 6
இப்போது கலந்து வைத்த முட்டை பாலை முதலில் கேரமல் ஊற்றி ஆற வைத்திருந்த புட்டிங் பாத்திரத்தில் ஊற்றவும்
- 7
குக்கருக்குள் ஸ்டான்ட் வைத்து புட்டிங் பத்திரத்தை உள்ளே வைத்து புட்டிங் பத்திரத்தை மூடி பின்பு குக்கரையும் மூட வேண்டும்.
- 8
குக்கர் விசில் தேவை படாது.
- 9
50 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்தால் மிகவும் சுவையான கேரமல் மில்க் எக் புட்டிங் ரெடியாகி இருக்கும்
- 10
ரெடியான புட்டிங்கை 2 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து அதன் பின் தட்டில் கவிழ்த்தி விருப்பமான வடிவில் துண்டுகள் செய்து பரிமாறவும்
Similar Recipes
More Recipes

கமெண்ட்