Channa Masala (Channa masala Recipe in Tamil)

#nutrient3
கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது.
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3
கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 5 விசில் வேக வைத்து வைக்கவும்.
- 2
வேக வைத்த கொண்டைக் கடலையில் ஒரு பிடி எடுத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் வெண்ணை சூடேறியதும் ஷாஜீரா பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சென்னா மசாலா பவுடர்,மிளகாய்த்தூள், கரம்மசாலா, தனியாத்தூள், தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
2கப் தண்ணீர் சேர்த்து மசாலாவை கொதிக்க விட்டு பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த கொண்டக்கடலையை அதில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
அரைத்து வைத்த கொண்டைக்கடலை விழுதை கிரேவியுடன் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். அரைத்து சேர்த்த விழுது கொதித்து கிரேவி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி மற்றும் ஆம்சூர் பவுடர் சேர்த்து கலந்து விடவும்.
- 7
சுவையான சன்னா மசாலா ரெடி.சூடான தந்தூரி ரொட்டி, நான், பட்டூரா புலாவ் என பரிமாறவும்.😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Dhaba Style Aloo Chole (Dhaba style aloo chole recipe in tamil)
#family #nutrient3 must try😋 BhuviKannan @ BK Vlogs -
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
-
கொண்டைக்கடலை மசாலா (Kondaikadalai masala recipe in tamil)
*கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால் எலும்புகளை வலிமையாக்குகிறது. *கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். #I lovecooking #goldenapron3 kavi murali -
காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபி (Rajma Recipe in Tamil)
#golden apron2.ராஜ்மா என்பது சிலவருடங்களுக்கு முன்பு நமக்கு என்னவென்றே தெரியாது ஏனென்றால் அது ஜம்மு காஷ்மீர் மற்றும் சில வட மாநிலங்களில் மட்டுமே சமைக்கக் கூடிய உணவாக இருந்தது ஆனால் இப்போது எல்லா மாநில உணவுகளும் எல்லா மாநிலங்களிலும் சமைத்து சாப்பிடக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது நம் குழு மூலம் வடமாநில உணவுகளையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வீட்டில் உள்ளவர்களையும் விதவிதமான ரெசிபிகளை கொடுத்து மகிழ்விக்க முடிகிறது. Santhi Chowthri -
-
-
-
-
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
-
-
-
சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)
#ed1சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது Shyamala Senthil -
-
-
சென்னா மசாலா(Aloo Channa masala for Pori recipe in tamil)
வழக்கமாக சென்னா மட்டும் சேர்த்து சென்னா மசாலா செய்வோம் இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து இன்று செய்தேன் சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil)
#nutrient1 #bookகடலைப்பருப்பில் புரதம் அதிகம் உள்ளது. சைவ புரதத்தின் ஒரு சிறந்த உதாரணம் இது. புரதசத்து மட்டுமில்லாமல் இதர தாதுக்களும் அதிகம் உள்ளது. நார்ச்சத்து அதிகம். விட்டமின் பி காம்ப்ளக்ஸ் இதில் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க அதிக இன்சுலினை சுரக்க வைக்கிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் எடை குறைய உதவுகிறது. கண் பார்வைக்கு நல்லது.உணவில் உள்ள சக்தியை நமக்கு பிரித்து எடுத்துக் கொடுக்கிறது. புதிய செல்கள் உருவாக உதவுகிறது. எலும்புகள் மற்றும் பற்கள் உறுதிக்கு உதவுகிறது. ஹீமோகுளோபின் பற்றாக்குறையை தீர்க்கிறது. உயிரணுக்கள் பெருக்கத்திற்கு உதவுகிறது. இதயம் ஆரோக்கியம் பெறுகிறது. மிகக்குறைந்த கொழுப்பு சக்தி இருப்பதால் உயர் ரத்த அழுத்த நோய் குறைய வழி வகுக்கிறது. பாஸ்பரஸ் அதிகம் இருக்கிறது. ஆகவே கடலைப்பருப்பை நம் அன்றாட உணவு பழக்கத்தில் ஏதாவது ஒரு வகையில் செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. Meena Ramesh -
ராஜ்மா தாள் (Rajma dhal recipe in tamil)
இது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது. ராஜ்மா ஒரு சிறந்த பருப்பு வகையாகும், இது இரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்த உதவுகிறது, ஏனெனில் இது இதய ஆரோக்கியமான ஒரு நல்ல மூலமாகும். புற்றுநோயைத் தடுக்கிறது. எடை இழப்பை நிலைநிறுத்துகிறது. எலும்புகளை பலப்படுத்துகிறது. Madhura Sathish -
-
-
தாமரை விதை ஃப்ரை (Lotus seed/ Makhana fry recipe in tamil)
தாமரை விதை உணவாக பயன்படுத்தினால் உடம்பு இடை குறைய ஆரம்பிக்கும். மெக்னீசியம் அதிகம் உள்ளதால் இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். Renukabala -
குஜராத்தி ஸ்டைல் கொண்டை கடலை மசாலா (Gujarati Style Kondaikadalai Masala recipe in Tamil)
#GA4/Gujarati/Week 4*வெள்ளை கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, புரதம், சுண்ணாம்பு சத்து மற்றும் பல வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் இதனை இரவில் ஊறவைத்து காலையில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு, நரம்புகள் பலமடையும், அத்துடன் உடலை உறுதியாக்கும்.* இத்தனை சத்து மிகுந்த கொண்டைக்கடலையை வைத்து குஜராத்தி ஸ்டைலில் மசாலா செய்து பார்த்தேன் சுவை நன்றாக இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
More Recipes
கமெண்ட்