Bisibela bath

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Nutrient3
#book
#goldenapron3
Bisibela bathதில் பருப்பு சேர்ப்பதால் புரதச்சத்தும் மற்றும் காய்கறிகளில் அமினோ அமிலம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் A,B,C,D&K சத்து போன்றவை அதிகம் உள்ளது .

Bisibela bath

#Nutrient3
#book
#goldenapron3
Bisibela bathதில் பருப்பு சேர்ப்பதால் புரதச்சத்தும் மற்றும் காய்கறிகளில் அமினோ அமிலம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் A,B,C,D&K சத்து போன்றவை அதிகம் உள்ளது .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45Mins
2 பரிமாறுவது
  1. 1கப் புழுங்கல் அரிசி
  2. 1/4கப் துவரம் பருப்பு
  3. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 2டீஸ்பூன் ஆயில்
  5. 2டீஸ்பூன் நெய்
  6. 10சின்ன வெங்காயம்
  7. 1கேரட்
  8. 6பீன்ஸ்
  9. 2துண்டு காலிஃளார்
  10. 7துண்டு முருங்கைக்காய்
  11. 5அவரைக்காய்
  12. 1/2குடை மிளகாய்
  13. 1உருளைக் கிழங்கு
  14. உப்பு
  15. 1 சிறிய எலுமிச்சை அளவு புளி
  16. வறுத்து அரைக்க :
  17. 1டீஸ்பூன் ஆயில்
  18. 7கொப்பரை தேங்காய் துண்டுகள்
  19. 1டீஸ்பூன் சீரகம்
  20. 1/4டீஸ்பூன் வெந்தயம்
  21. 1டீஸ்பூன் தனியா
  22. 1டீஸ்பூன் கடலை பருப்பு
  23. 1டீஸ்பூன் உளுந்து பருப்பு
  24. 1/2டீஸ்பூன் மிளகு
  25. 1டீஸ்பூன் கசகசா
  26. 1 சிறிய பட்டை,2 கிராம்பு,1 ஏலக்காய்
  27. 1டீஸ்பூன் வெள்ளை எள்ளு
  28. 6வரமிளகாய்
  29. 1 சிட்டிகை பெருங்காயம்
  30. கருவேப்பிலை
  31. தாளிக்க
  32. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  33. 1டீஸ்பூன் கடுகு
  34. 6உடைத்த முந்திரி
  35. 1 வரமிளகாய் கிள்ளியது
  36. கருவேப்பிலை
  37. 2 சிட்டிகை பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

45Mins
  1. 1

    புழுங்கல் அரிசி கழுவி வேக வைத்து வடித்து வைக்கவும். துவரம் பருப்பு கழுவி தண்ணீர் 1 கப் ஊற்றி குக்கரில் 4 விசில் விட்டு வேக விடவும். காய்கறிகள் முருங்கைக்காய் 7 துண்டுகள்,கேரட் 1,பீன்ஸ் 5,குடை மிளகாய் 1/2,காலிஃளார் 2 துண்டு,கழுவி நறுக்கி வைக்கவும்.

  2. 2

    சின்ன வெங்காயம் 10 தோல் நீக்கி கழுவி வைக்கவும் உருளைக் கிழங்கு 1 தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். கொப்பரை தேங்காய் 7 துண்டுகள் நறுக்கி வைக்கவும்.

  3. 3

    வறுத்து அரைக்க 1 டீஸ்பூன் ஆயில் விட்டு உளுந்து பருப்பு 1 டீஸ்பூன்,கடலை பருப்பு 1 டீஸ்பூன், சீரகம்1/2 டீஸ்பூன், வெந்தயம்1/4 டீஸ்பூன், மிளகு 1/2 டீஸ்பூன்,வரமிளகாய் 6,கசகசா 1 டீஸ்பூன்,வெள்ளை எள்ளு 1 டீஸ்பூன்,1 சிறிய பட்டை, 2 கிராம்பு,1 ஏலக்காய், சிறிது கருவேப்பிலை வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் சேர்க்கவும்.

  4. 4

    அதை பொடித்து வைக்கவும். புளி ஊற வைக்கவும்.குக்கரில் ஆயில் 2 டீஸ்பூன்,நெய் 2 டீஸ்பூன் விட்டு கடுகு கருவேப்பிலை சிறிது சேர்த்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    அதனுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்,உப்பு சேர்த்து வதக்கவும்.

  6. 6

    ஊற விட்ட புளியை கரைத்த 1/2 கப் புளித்தண்ணீர் ஊற்றவும்.வறுத்து அரைத்த பொடியை சேர்க்கவும்.கலக்கி விட்டு வெந்த பருப்பை சேர்க்கவும்.

  7. 7

    எல்லாவற்றையும் கலக்கி குக்கரில் 1 விசில் விடவும். திறந்து அதில் வடித்து வைத்த சாதம் சேர்க்கவும்.

  8. 8

    சாதத்தை சேர்த்து கிளறி விடவும்.தாளிக்க கடுகு 1 டீஸ்பூன்,உடைத்த முந்திரி 6,1 வரமிளகாய் கிள்ளியது, கருவேப்பிலை,2 சிட்டிகை பெருங்காயம் எடுத்து வைக்கவும்.

  9. 9

    கடாயில் 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கடுகு, முந்திரி வரமிளகாய்,கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து Bisibela bath மேலே சேர்க்கவும்.தொட்டு சாப்பிட வடகம் பொரித்து வைத்து சாப்பிட்டால் மேலும் சுவையாக இருக்கும்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes