டபுள் லேயர் ரோஸ் அகர் அகர் (Double layer rose agar agar recipe in tamil)

Fathima's Kitchen @fmcook_1993
டபுள் லேயர் ரோஸ் அகர் அகர் (Double layer rose agar agar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அகர் அகர் 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- 2
பாலை கொதிக்க விட்டு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கரைத்துக் கொண்டு அகர் அகரில் 5 கிராம் சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்க விடவும்.
- 3
அகர் அகர் முழுவதுமாக கரைந்ததும் ஒரு தட்டு அல்லது ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு ஆறியதும் பிரிட்ஜில் வைக்கவும்.
- 4
3 கப் தண்ணீர் கொதிக்க விடவும் அதில் சர்க்கரை சேர்த்து கலந்து பின் 5 கிராம் அகர் அகர் கரைந்ததும் ரோஸ் எஸன்ஸ் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.முதலில் ஊற்றிய பால் அகர் அகர் மேல் ஊற்றி ஆறிய பின் பிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
- 5
விருப்பமான வடிவத்தில் வெட்டி பறிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12556136



கமெண்ட்