கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)

#family
#nutrient3
#arusuvai1
#goldenapron3
18வது வாரம்
கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)
#family
#nutrient3
#arusuvai1
#goldenapron3
18வது வாரம்
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் பாத்திரத்தை வைத்து 2கப் சர்க்கரை சேர்த்து 1கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு நன்றாக பாகை காய்ச்ச வேண்டும்.
- 2
நன்றாக கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை ஆஃப் செய்து சர்க்கரை பாகை கிளறி விட்டு ஆறவிடவும்.ஆறியவுடன் வரும் சர்க்கரை பவுடரை எடுத்து கொள்ள வேண்டும்.
- 3
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் விட்டு உருகியதும் கடலை மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி விடவும். நன்றாக கடலைமாவு வாசம் போகும் வரை கிளறி விடவும்.
- 4
அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும். பால்கோவா பதத்திற்கு வந்ததும் இறக்கி மற்றொரு பாத்திரத்தில் மாற்றவும். அடிபிடிக்காமல் இருக்கும்.
- 5
பின் பொடித்து வைத்துள்ள பாதாம், முந்திரி, பிஸ்தா சேர்த்து கை தொடும் சூட்டில் மாவில் கலந்து கொள்ள வேண்டும்.
- 6
கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்.
- 7
அவற்றின் மேல் குங்குமப்பூ அல்லது பொடியாக நறுக்கிய பிஸ்தா -வை கார்னிஷாக வைக்கவும். இதேபோல் அனைத்து மாணவரையும் லட்டாக பிடித்து வைக்கவும்.
- 8
இவற்றை 7 அல்லது 8மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
- 9
பின் இவற்றை சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் வைத்து காற்று செல்லாதவாறு அடைத்து ஃப்ரிஜில் வைத்து 2வாரம் உபயோகப்படுத்தலாம்.
- 10
மிகவும் சுவையான கடலைமாவு லட்டு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்