மீன் பொளிச்சது

#kerala கேரளா உணவுகளின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று மீன் பொளிச்சது
சமையல் குறிப்புகள்
- 1
மீன் மசாலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் சிறிது தண்ணீர் கலந்து எடுத்துக் கொள்ளவும் மசாலாக்களை மீன்களை தடவி ஒரு 30 நிமிடம் ஊறவைக்கவும்... வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு ஊறவைத்த மீன்களை பொரித்து எடுக்கவும்
- 2
வேறொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும் வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கி அதில் மிளகாய் தூள் தனியா தூள் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவவும்... 😋😋 வித்தியாசமான சுவைக்கு தக்காளிக்கு பதில் சிறிது புளிக்கரைசால் மற்றும் இறுதியாக 2டேபிள்ஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து கெட்டியானது எடுக்கவும் 😋😋😋
- 3
வாழை இலையில் நம் தயாரித்து வைத்த மசாலா சிறிதும் அதன் மேல் பொரித்து மீனையும் அதன் மேல் மறுபடியும் சிறிது மசாலாவும் வைக்கவும்
- 4
பிறகு படதில் கட்டியவாறு மடித்துக்கொள்ளவும்... மடித்த பின் ஃபாயில் சீட்டில் ஒருமுறை மடித்துக் கொள்ளவும்
- 5
தோசை சட்டியை சூடு செய்து அதில் சிறிது எண்ணெய் விட்டு மடித்து வைத்துள்ள மீன்களை தோசை சட்டியில் வைத்து மிதமான தியில் 20நிமிடம் வைத்து எடுக்கவும் (ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒரு முறை திருப்பிப் போட்வும்)
Similar Recipes
More Recipes


















கமெண்ட்