மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)

#NoOvenBaking
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான சாக்லேட் ரோல். இதனை நாம் ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 3/4 கப் மைதா, 1/4 கப் தயிர், 3 டீஸ்பூன் சக்கரை, 3/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக பிசையவும்.பின்னர் 10 நிமிடம் மாவை மூடி வைக்கவும்.
- 2
10 நிமிடம் கழித்து மாவை எடுத்து சப்பாத்தி போல தேய்க்கவும். அதன் மேலே சாக்கோ சிரப் எல்லா பக்கமும் தேய்க்கவும்.
- 3
அடுத்து 4 சாக்லேட் பிஸ்கட் எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்.
- 4
இப்போது சாக்லேட் பவுடரை மேலே பரப்பவும்.இப்போது ரொட்டியை மடிக்கவும்.மடித்த பின் சிறு துண்டுகளாக வெட்டவும்.
- 5
அடுத்து ஒரு தட்டில் எண்ணெய் தேய்த்து வெட்டிய துண்டுகளை அதன்மேல் வைக்கவும். இப்போது ஒரு கடாயில் ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் தட்டை வைத்து மூடி 15 நிமிடம் இதமான சூட்டில் பேக் செய்யவும்.
- 6
15 நிமிடம் கழித்து சுவையான சாக்லேட் ரோல் சுவைக்க தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்