ஆலூ கெட்டே மசாலா பல்யா (potato masala) (Aloo kette masala palya recipe in tamil)

ஆலூ கெட்டே மசாலா பல்யா எல்லா சாதத்துடன் துணை உணவாக சுவைக்ககூடியது. இது பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து செய்துள்ளதால் வித்யாசமான சுவையில் ருசிக்கலாம்.
#Karnataka

சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை (முக்கால் பதம்) வேகவைத்து தோல் உரித்து வைத்துக்கொள்ளவும்.
- 2
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு, வற்றல் மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வேகவைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், சீரகத்தூள், பாவ்பாஜி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
இரண்டு நிமிடங்கள் வதக்கி, மஞ்சள் தூள், அம்சூர் பவுடர், உப்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 4
கடைசியாக வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து நன்கு வதக்கி இறக்கினால் சுவையான ஆலூ கெட்டே மசாலா தயார்.
- 5
வறுத்த உருளைக்கிழங்கை எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றவும். இப்போது மிகவும் சுவையான கர்நாடக கலந்த சாதத்தின் துணை உணவான ஆலூ கெட்டே மசாலா பல்யா சுவைக்கத்தயார்.
- 6
அனைவரும் இதே முறையில் செய்து சுவைக்கவும். இது சப்பாத்தி, ரொட்டி உடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (7)