லஞ்ச் காம்போ (mini Lunch combo)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#karnataka
கர்நாடகா மாநிலத்தில் பாரம்பரியமான சில உணவுகளை சேர்த்து மொத்தமாக மினி லஞ்ச் காம்போ வாக கொடுத்துள்ளேன் சிம்ப்ளா அதே சமயம் ருசியில் வித்தியாசமாகவும் இருக்கும் இந்த உணவுகள்
ராகி முட்டூ (ராகி களி)
உப்பு நசுரூ (உப்பு சாறு)
வாங்கி பாத்
கீரை கூட்டு
சாதம்
வெங்காய வடகம்

லஞ்ச் காம்போ (mini Lunch combo)

#karnataka
கர்நாடகா மாநிலத்தில் பாரம்பரியமான சில உணவுகளை சேர்த்து மொத்தமாக மினி லஞ்ச் காம்போ வாக கொடுத்துள்ளேன் சிம்ப்ளா அதே சமயம் ருசியில் வித்தியாசமாகவும் இருக்கும் இந்த உணவுகள்
ராகி முட்டூ (ராகி களி)
உப்பு நசுரூ (உப்பு சாறு)
வாங்கி பாத்
கீரை கூட்டு
சாதம்
வெங்காய வடகம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. ராகி முட்டூ செய்ய:
  2. 1 கப் ராகி மாவு
  3. 3_1/4 கப் தண்ணீர்
  4. உப்பு சிறிதளவு
  5. 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  6. உப்பு நசுரூ செய்ய:
  7. வேகவைப்பதற்கு:
  8. 1 கப் நறுக்கிய கீரை
  9. 1/2 கப் துவரம்பருப்பு
  10. 1/2 கப் பச்சைபயிறு
  11. 2 பச்சை மிளகாய்
  12. மஞ்சள் தூள் சிறிதளவு
  13. கல் உப்பு தேவையான அளவு
  14. அரைக்க:
  15. 1/4 கப் வதக்கிய சின்ன வெங்காயம்
  16. 4பல் பூண்டு வதங்கியதும்
  17. 1 தக்காளி
  18. புளி சிறிது
  19. 1 ஸ்பூன் சீரகம்
  20. 1 ஸ்பூன் மிளகு
  21. 2 பச்சை மிளகாய்
  22. 2 டேபிள்ஸ்பூன் வேகவைத்த கீரை பருப்பு கலவை
  23. 1 கொத்து கறிவேப்பிலை
  24. 1/2 கப் தேங்காய் துருவல்
  25. தாளிக்க:
  26. 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  27. 1 ஸ்பூன் கடுகு
  28. கறிவேப்பிலை சிறிது
  29. 4 வரமிளகாய்
  30. 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  31. 2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  32. உப்பு சிறிதளவு
  33. கீரை கூட்டு செய்ய:
  34. மீதமுள்ள வேகவைத்த கீரை பருப்பு கலவை
  35. 1/2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  36. 2 பல் பூண்டு இடித்தது
  37. 3 தக்காளி
  38. 5 வரமிளகாய்
  39. 1 ஸ்பூன் கடுகு
  40. 1 ஸ்பூன் சீரகம்
  41. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  42. உப்பு சிறிதளவு
  43. வாங்கி பாத் செய்ய:
  44. 1/4 கிலோ கத்தரிக்காய்
  45. 1 கப் உதிராக வடித்த சாதம்
  46. 1/4 கப் எண்ணெய்
  47. 1 ஸ்பூன் கடுகு
  48. 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  49. 2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  50. 2 டேபிள்ஸ்பூன் வேர்கடலை
  51. 10 முந்திரி
  52. கறிவேப்பிலை சிறிது
  53. 1/4 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  54. 2_1/2 ஸ்பூன் வாங்கி பாத் மசாலா தூள்
  55. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  56. 2 டேபிள்ஸ்பூன் புளி பேஸ்ட்
  57. 1 ஸ்பூன் துருவிய அச்சு வெல்லம்
  58. உப்பு தேவையான அளவு
  59. வாங்கி பாத் மசாலா தூள் அரைக்க:
  60. 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  61. 2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  62. 2 ஸ்பூன் கொத்தமல்லி விதை
  63. 1 கொத்து கறிவேப்பிலை
  64. 5 _6 வரமிளகாய்
  65. 2நீள துண்டு பட்டை
  66. 6 கிராம்பு
  67. 2 அன்னாச்சி பூ
  68. 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  69. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ராகி முட்டூ செய்ய: வாணலியில் கொடுத்துள்ள தண்ணீரில் இருந்து 1/2 கப் நீர் தனியாக எடுத்து விட்டு மீதமுள்ள தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க விடவும், பின் எடுத்து வைத்துள்ள தண்ணீரில் ராகி மாவை தூவி கட்டியில்லாமல் நன்கு கரைத்து கொள்ளவும், பின் கொதித்ததும் கரைத்து வைத்துள்ள ராகி மாவு கரைசலை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும், கைவிடா தொடர்ந்து நன்கு அழுத்தி அழுத்தி விட்டு கிளறவும்

  2. 2

    கைகளில் சிறிது தண்ணீர் தொட்டு கொண்டு மாவை எடுத்து தொட்டு உருட்டி பார்த்தால் கைகளில் ஒட்டாமல் வருவது பதம் ராகி வெந்ததும் நன்கு மணம் வர ஆரம்பிக்கும் பின் சற்று ஆறியதும் (கைப்பொறுக்கும் சூட்டில்) கைகளில் சிறிது நல்லெண்ணெய் தொட்டு கொண்டு பந்து போல் உருட்டி வைக்கவும்

  3. 3

    உப்பு நசுரூ செய்ய: வேகவைக்க கொடுத்துள்ள பொருட்களை குக்கரில் போட்டு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி 2_3 விசில் வந்ததும் இறக்கவும்

  4. 4

    பின் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்

  5. 5

    பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,வரமிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து வதக்கவும்,

  6. 6

    பின் அரைத்த விழுது சேர்த்து மெல்லிய தீயில் வைத்து 5 நிமிடங்கள் வரை நன்கு வதக்கவும்,

  7. 7

    பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்

  8. 8

    கீரை கூட்டு செய்ய: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கியதும் மீதமுள்ள கீரை பருப்பை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும் (

  9. 9

    உப்பை சேர்க்கும் போது கவனமாக சேர்த்து கொள்ளவும் ஏற்கனவே வேகவைத்த கீரை இல் உப்பு சேர்த்து உள்ளது அதனால் கவனமாக சேர்த்து கொள்ளவும்)

  10. 10

    வாங்கி பாத் செய்ய: தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும் கத்தரிக்காய் ஐ நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும் வாங்கி பாத் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்

  11. 11

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கத்தரிக்காய் ஐ சேர்த்து வதக்கவும் பாதி வெந்ததும் எடுத்து தனியாக வைக்கவும் பின் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு முந்திரி வேர்க்கடலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்

  12. 12

    பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் வதக்கிய கத்தரிக்காய் ஐ சேர்த்து நன்கு வதக்கவும் பின் வாங்கி பாத் மசாலா தூள் மற்றும் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின் 90 சதவீதம் கத்தரிக்காய் வெந்ததும் புளி பேஸ்ட் உடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி நன்கு கிளறவும் பின் வெல்லத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்

  13. 13

    பின் சூடான சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

  14. 14

    இப்போது அனைத்தும் தயார் அதை அழகாக அடுக்கி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes