சமையல் குறிப்புகள்
- 1
புளியை 10 நிமிடம் ஊற வைத்து நன்றாக கரைத்து கொள்ளவும்
- 2
மிக்சியில் தக்காளி, உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 3
கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்
- 4
கறிவேப்பிலை சேர்க்கவும்
- 5
பின்னர் அரைத்த விழுதை சேர்க்கவும்
- 6
பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
கரைத்து வைத்துள்ள புளியை ஊற்ற வேண்டும்
- 8
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
- 9
நன்றாக கொதித்து எண்ணெய் வெளியேறியதும் கழுவிய மீன் துண்டுகளை போடவும்
- 10
ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்து மூடி வைக்கவும்
- 11
கழுவிய மீன் துண்டுகளில் இஞ்சி பூண்டு விழுது, பொடித்த மிளகு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 12
15 நிமிடம் ஊற வைக்கவும்
- 13
தோசை கல்லில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை ஒவ்வொரு துண்டுகளாக கல்லில் இடவேண்டும்
- 14
ஒரு புறம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும்
- 15
நன்றாக வெந்ததும் வேறு பாத்திரத்தில் மாற்றவும்
- 16
குக்கரில் கழுவிய அரிசி, 4 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும்
- 17
தட்டில் சூடான சாதம், மீன் குழம்பு, பொரித்த மீனை சுவையாக பரிமாறவும்
Similar Recipes
More Recipes





கமெண்ட்