முளைகட்டிய கொண்டைக்கடலை சாலட் (Mulaikattiya kondakadalai salad recipe in tamil)

Belji Christo @cook_20603733
முளைகட்டிய கொண்டைக்கடலை சாலட் (Mulaikattiya kondakadalai salad recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலை முளைகட்ட, 1 கப் கொண்டைக்கடலை 7 மணி நேரம் ஊறவைக்கவும். அப்புறம் ஒரு பாக்ஸில் போட்டு மூடி 24 மணி நேரம் வைக்கவும். அடுத்த நாள் சின்ன முளை வந்திருக்கும். இன்னும் முளை வேண்டுமென்றால் லேசாக கழுவிவிட்டு இன்னும் 24 மணி நேரம் மூடி வைக்கவும். அடுத்த நாள் நன்கு முளைத்து இருக்கும்.
- 2
முளைகட்டிய கொண்டைக்கடலை குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வர வரைக்கும் வேகவைக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு மற்றும் கருவேப்பிலை பொட்டு வதக்கவும். பின்பு தேங்காய் போட்டு நன்கு கலந்து விடவும். கடைசியா கொண்டை கடலை போட்டு நன்கு கலந்து விட்டு ஒரு நிமிடம் மூடி வைத்து வேக விடவும். இப்போது ரொம்ப சத்தான முளைகட்டிய கொண்டைக் கடலை சாலட் தயார் ஆயிடுச்சு.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13904150










கமெண்ட்