அரிசி ரசகுல்லா - மீதமான சாதத்தில் (Rice Rasagulla) (Arisi rasagulla recipe in tamil)

என்னுடைய மகள் தீபாவளி பண்டிகையில் இருந்து அவள் உண்ணும் மதிய உணவில் ஒன்று குலாப்ஜாமுன் அல்லது ரசகுல்லா இருக்கவேண்டும் என்று கேட்கிறாள். சாதம் மட்டும் மதிய உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. அதனால் அந்த சாதத்தை ரசகுல்லா வாக மாற்றி மதிய உணவிற்கு அளித்தேன். எப்படி மீதமான சாதத்தை ரசகுல்லா வாக மாற்றுவது என்பது பற்றிய செய்முறை விளக்கம் தான் இது. #ranjanishome #kids3

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வடித்த சாதத்தை ஒரு மிக்ஸியில் போட்டுக் கொள்ளவும்.
- 2
பின்னர் அதை நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்துக்கொண்ட அரிசி விழுதில் 1 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு பந்துகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் 3/4 கப் சர்க்கரை மற்றும் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 6
கொதிக்கும் சர்க்கரை தண்ணீரில் 1- ஏலக்காய் சேர்க்கவும்
- 7
இரண்டு அல்லது மூன்று கொதி வந்தவுடன் செய்து வைத்திருக்கும் அரிசி ரசகுல்லாவை சக்கரை நீரில் போட்டு வேக விடவும்.
- 8
மிதமான தீயில் ரசகுல்லாவை சர்க்கரை நீரில் 5 முதல் 7 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
- 9
அதிக நேரம் கொதிக்க வைத்தால் சாதத்தின் கஞ்சி சர்க்கரை பாகில் படிய ஆரம்பித்து விடும். அதனால் ரசகுல்லா வெந்தவுடன் ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும்.
- 10
ரசகுல்லாவின் மேல் நறுக்கிய பாதாம் பருப்புகள், ரோஜா இதழ்கள் சேர்த்துக் கொள்ளவும்.
- 11
அரிசி ரசகுல்லா பரிமாற தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (7)