கேரட் சாதம்🥕🥕🥕🥕

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#kids3#lunchbox# கேரட்டில் வைட்டமின் 'சி' உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. கேரட்டை உணவில் அடிக்கடி சேர்ப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.

கேரட் சாதம்🥕🥕🥕🥕

#kids3#lunchbox# கேரட்டில் வைட்டமின் 'சி' உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. கேரட்டை உணவில் அடிக்கடி சேர்ப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. கேரட் துருவியது - 3
  2. வெங்காயம் -1
  3. பச்சைமிளகாய் -2
  4. முழு பூண்டு -1
  5. கடுகு,உளுந்து - 1 தே.க
  6. முந்திரிப்பருப்பு- 2 மேசைக்கரண்டி
  7. மஞ்சள் தூள் -1/4 தே.க
  8. சீரகம் -1/4 தே.க
  9. கறிவேப்பிலை - சிறிதளவு
  10. வேகவைத்த சாதம்- 2 கப்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் வதங்கிய பின் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்துக் கிளறவும்.

  3. 3

    பிறகு துருவிய கேரட், மஞ்சள்தூள், முழுகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

  4. 4

    இறுதியில் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் குறைந்து கேரட் வெந்ததும் அடுப்பை அணைத்து ஆறியதும் வேக வைத்த சாதம் சேர்த்து கிளறவும்.

  5. 5
  6. 6

    குழந்தைகள் விருப்பத்திற்கு ஏற்ப சைடிஸ் தயார் செய்து கொடுக்கலாம்.

  7. 7

    கேரட் சாதம் அதனுடன் உருளைக்கிழங்கு வறுவல், வேக வைத்த முட்டை சேர்த்து லஞ்ச் பாக்ஸ் தயார் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes