சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)

கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/
சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)
கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீரை வடித்துவிட்டு குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
பாசுமதி அரிசியை சிறிது நேரம் ஊறவைக்கவும். வெங்காயம் பச்சைமிளகாயை கட் பண்ணிக் கொள்ளவும்
- 3
குக்கரை அடுப்பிலேற்றி எண்ணெய் ஊற்றவும் சூடானதும் பட்டை கிராம்பு,பிரிஞ்சி இலை ஏலக்காய் போட்டு அதன் பின் வெங்காயம் பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும் சிறிது வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து அத்துடன் ஊறவைத்த அரிசி புதினா கொத்தமல்லி தழை சேர்த்து புரட்டவும் அதன் பின் தயிர் சேர்த்து உப்பு போட்டு கிளறி 400 கிராம் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இரண்டு நிமிடங்கள் சிம்மில் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
- 4
சத்தான சுவையான சன்னா புலாவ் தயார் நீங்களும் செய்து சுவையுங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட் (3)