பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil)

#GA4 Week19 பன்னீர் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பன்னீரை பயன்படுத்தி பலவகையான சமையலை செய்யலாம். பன்னீரில் செய்த உணவு மிகவும் ருசியாக இருக்கும்.
குறிப்பு:
பன்னீரை வதக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும். பன்னீரை இவ்வாறு வறுப்பதினால் பன்னீர் உடையாமல், பன்னீர் புலாவ் செய்ய ஈஸியாக இருக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய 200 கிராம் பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
- 2
இப்போது பன்னீர் புலாவ் செய்ய அடுப்பில் ஒரு பிரஷர் குக்கரை வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நெய், சீரகம், பட்டை, ஏலக்காய்,கிராம்பு,பிரியாணி இலை, சிறிதளவு மிளகு, பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
வெங்காயம் பொன்னிறம் ஆனவுடன் அவற்றில் நறுக்கிய கேரட், பச்சை பட்டாணி, கரம் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்க வேண்டும்.
- 4
காய்கறிகள் அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு கையளவு கொத்தமல்லி மற்றும் வறுத்து வைத்துள்ள பன்னீர் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும்.
- 5
பின்பு சுத்தமாக கழுவி 30நிமிடம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை இவற்றில் சேர்த்து சில நிமிடங்கள் மெதுவாக வதக்கி விடவும். பின்பு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறிவிட்டு பிரஷர் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வைத்திருந்து, பின்பு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
- 6
இப்பொழுது சுவையான பன்னீர் புலாவ் தயார், அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்