பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)

#chutney
பிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம்.

சமையல் குறிப்புகள்
- 1
பிரண்டையை நார்களை உரித்து தனியாக அலசி வைக்கவும். இது அரிக்கும் தன்மை கொண்டது நான் கையுறை உபயோகித்து நார்களை உரித்தேன்.
- 2
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு கடலைப் பருப்பு வரமிளகாய் வறுத்து தனியாக வைக்கவும், பிறகு அதே கடாயில் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி எடுக்கவும். 2 டீஸ்பூன் ஆயில் ஊற்றி பிரண்டையை சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும்
- 3
ஆறிய பின் மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து உப்பு புளி சேர்த்து மைய அரைக்கவும்.
- 4
மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து அரைத்து சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்கவும்..
இப்படி செய்வது அரிப்பு
தன்மையை குறைப்பதற்காக.. - 5
கடைசியா சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்
பிரண்டை சட்னி பரிமாற தயார். இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
- செம்பருத்தி பூ சட்னி (sembaruthi poo chutney recipe in tamil)
- பூண்டு வதக்கு சட்னி (Poondu vathakku chutney recipe in tamil)
- பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
- பீட்ரூட் சட்னி (Beetroot chutney recipe in tamil)
- கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)

கமெண்ட் (2)