டேஸ்டி டொமேட்டோ கெட்சப் (Tasty Tomato Ketchup)

#colours1
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருப்பது டொமேட்டோ கெட்சப் அதனை வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம்
டேஸ்டி டொமேட்டோ கெட்சப் (Tasty Tomato Ketchup)
#colours1
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததாக இருப்பது டொமேட்டோ கெட்சப் அதனை வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரை கிலோ நன்றாக பழுத்த தக்காளியை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு தக்காளியில் உள்ள அதன் கண் பகுதியை எல்லா தக்காளிகளிலும் நீக்கிவிட்டு(படத்தில் காட்டியது போல்) எல்லா தக்காளியையும் 4 துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 3
அடுத்து ஒரு பாத்திரத்தில் நாம் நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளையும் 1 பெரிய வெங்காயத்தில் 1/4 பகுதியையும் நான்கு பல் பூண்டையும் சேர்க்க வேண்டும்
- 4
பிறகு ஒரு சிறிய துண்டு பட்டை 2 கிராம்பு இவற்றையும் தக்காளி வெங்காயத்துடன் சேர்த்து மூடி வைத்து வேக விடவேண்டும் (நன்றாக பழுத்த தக்காளி ஆக இருந்தால் அதிலிருந்து வரும் சாறே போதுமான அளவு இருக்கும் அதனால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை...தேவைப்பட்டால் கால் டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கலாம்)
- 5
20 நிமிடம் வரை நன்றாக தக்காளி குழைந்து போகும் வரை வேக வேண்டும் 20 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு அதனை ஆற வைக்க வேண்டும்
- 6
பிறகு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 7
அடுத்து அதனை ஒரு வடிகட்டி வைத்து வடிகட்டி அதன் ஜூஸை மட்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
- 8
அடுத்து ஒரு கடாயில் நாம் அரைத்த எடுத்துள்ள தக்காளி பழ ஜூஸ்களை சேர்த்து சூடேற்ற வேண்டும்
- 9
லேசாக சூடு ஏறியவுடன் அதில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை தேவையான அளவு உப்பு சேர்க்கவேண்டும்
- 10
அத்துடன் அரை டேபிள்ஸ்பூன் அளவிற்கு காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்
- 11
ஜூஸ் பதத்தில் இருக்கும் தக்காளி சாறு நன்றாக கெட்டியாகும் வரை வேக விட வேண்டும் அடிக்கடி கிளறி விட வேண்டும்
- 12
கெட்சப் பதத்திற்கு சரியாக வந்து விட்டதை நாம் அறிந்து கொள்வதற்காக வெந்து கொண்டிருக்கும் கெட்சப்லிருந்து ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து ஒரு தட்டில் வைத்து அதனை ஒரு ஸ்பூன் கொண்டு இழுத்து விட வேண்டும் அப்பொழுது இரண்டு பக்கமும் கெட்சப்களும் நடுவில் ஒரு கோடும் விழுந்து இருக்கவேண்டும்(படத்தில் இருப்பதை போல்) அதாவது தண்ணியாக இல்லாமல் இந்த அளவிற்கு கெட்டியாக வரும் வரை வேக விட வேண்டும்
- 13
அவ்வளவுதான் இதோ மிகவும் சுலபமான மிகவும் ருசியான குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கக்கூடிய டொமேட்டோ கெட்சப் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
































கமெண்ட்