மட்டர் பன்னீர் கிரேவி / Butter panner curry receip in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பன்னீரில் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து
- 2
ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மசாலா தடவிய பன்னீரை சேர்த்து 2 நிமிடங்கள் பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 3 தக்காளியை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
- 4
பட்டை கிராம்பு சோம்பு பிரியாணி இலை கல்பாசி பூ சேர்த்து தாளிக்கவும் பிறகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
வெங்காயம் வதங்க சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும் இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு
- 6
அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 7
அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா அரை டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும் மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு
- 8
கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை பட்டாணியை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும்
- 9
கிரேவி நன்றாக கொதித்த பிறகு பொரித்து வைத்த பன்னீரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கவும்
- 10
சுவையான மட்டர் பன்னீர் கிரேவி தயார்
Keywords
Similar Recipes
More Recipes

































கமெண்ட்