பிடிகருணை மசியல்(pidi karunai masiyal recipe in tamil)

எங்கள் வீட்டில் பொங்கல் பண்டிகை என்றாலே பலவிதமான பொருட்களை உபயோகித்து சமைப்பது வழக்கம் அதில் முக்கியமாக இடம் பெறுவது இந்த பிடிகருணை இதை பயன்படுத்தி மசியல் செய்வார்கள்.
#pongal2022

சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிடி கருணையை போட்டு ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை தோலுரித்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி மசித்து வைத்த கிழங்கையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- 2
இதனுடன் புளிக்கரைசல் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வேக வைத்து தேங்காய் பூவை தூவி இறக்கினால் சுவையான பிடிகருணை மசியல் தயார். இதை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்