பாவ் பாஜி (Pav Bhaji recipe in tamil)

பாவ் பாஜி (Pav Bhaji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் சிறிது வெண்ணெயை சேர்த்து அதில் சீரகம் தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயத்தையும், இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கியதும் அதனுடன், பச்சை பட்டாணி, குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
எல்லாம் வதங்கியதும் அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் அதனுடன் பாவ் பாஜி மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். எல்லாம் வதங்கியதும் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து மூடி 10 நிமிடங்கள் வேகவிடவும்.
- 3
வெந்த மசாலாவை நன்றாக மசித்து மீண்டும் கொதிக்க விடவும். இறுதியாக அதில் சிறிது வெண்ணையும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். பாவை நெய்யில் டோஸ்ட் செய்துகொள்ளுங்கள். பாவிர்கு நடுவ்வில் இந்த மசாலா வைது சாப்பிடுங்கள்.
- 4
இப்போது சூடாக அதை பரிமாறவும். பரிமாறும் போது அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை பிழிந்து வெங்காயத்தையும், கொத்தமல்லி தூவி விடுங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்