உருளைக்கிழங்கு பட்டாணி பால் கறி(peas potato curry recipe in tamil)

உருளைக்கிழங்கு பட்டாணி பால் கறி(peas potato curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும் இரண்டு உருளைக்கிழங்கை கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும் பச்சை பட்டாணி அலசி வைக்கவும். தேங்காய் துருவி வைக்கவும்.தேங்காய் சோம்பு, கசகசா, முந்திரி, 3 பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்து வைக்கவும்.
- 2
ஒரு குக்கரில்,4ஸ்பூன் ஆயில் விட்டு,பட்டை கிராம்பு,கல்பாசி,தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும்,பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.தேவையான உப்பு சேர்த்து அரைத்த விழுது சேர்த்து கலந்து விட்டு தேவையான நீர் விட்டு இரண்டு விசில் விடவும்.
- 3
மல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி,தேங்காய்ப்பால் கறி தயார். சப்பாத்தி பூரிக்கு தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.
- 4
தேவைப்பட்டால் சிறிதளவு கரம் மசாலா தூள் தூவி கொதிக்க விடலாம்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்