வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#club
இது கல்யாண விருந்து ஸ்பெஷல்

வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)

#club
இது கல்யாண விருந்து ஸ்பெஷல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 வாழைத்தண்டு
  2. 2 டேபிள்ஸ்பூன் தயிர்
  3. 1/2 லெமன்
  4. 1/2 கப் கடலைப்பருப்பு
  5. 1 கப் பாசிப்பருப்பு
  6. 1/4 கிலோ வெங்காயம்
  7. 4 பச்சை மிளகாய்
  8. 6 பல் பூண்டு
  9. 3 தக்காளி
  10. 1 டேபிள்ஸ்பூன் வறுத்த சீரக மிளகுத்தூள்
  11. 2 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  12. 150 மில்லி தேங்காய் எண்ணெய்
  13. 1 ஸ்பூன் கடுகு
  14. 1 ஸ்பூன் சீரகம்
  15. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  16. தேவையானஅளவுஉப்பு
  17. சிறிதுமஞ்சள் தூள்
  18. சிறிதுகறிவேப்பிலை
  19. சிறிதுகொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வாழைத்தண்டை உரித்து வைக்கவும் பின் தயிர் உடன் லெமன் சாறு பிழிந்து விடவும்

  2. 2

    பின் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும் வாழைத்தண்டை ரவுண்ட் ஷேப்பில் நறுக்கி நடுவில் விரலாலே சுற்றி நார் எடுக்கவும்

  3. 3

    பின் பொடியாக நறுக்கி கொள்ளவும் தயிர் லெமன் கலவையில் போட்டு வைத்தால் 12 மணி நேரம் ஆனாலும் கருக்காது நிறம் மாறாமல் இருக்கும்

  4. 4

    (நான் முதல் நாள் இரவு கட்செய்து ஸ்டோர் செஞ்சேன் மறுநாள் காலை வரை கூட நிறம் மாறாமல் அப்படியே இருந்தது) பின் குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டை கழுவி தண்ணீரை வடிகட்டி போடவும் பின் கூட உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

  5. 5

    பின் கடலைப்பருப்பு பாசிப்பருப்பு சேர்க்கவும்

  6. 6

    பின் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்

  7. 7

    தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம் வெங்காயம் பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும் இதை தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தாளித்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  8. 8

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் தாளித்து பூண்டு சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  9. 9

    பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி மசிந்ததும் சீரகத்தூள் மிளகுத்தூள் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்

  10. 10

    தக்காளி மசிந்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும் பின் வேகவைத்த வாழைத்தண்டை சேர்த்து நன்கு கிளறவும்

  11. 11

    5 நிமிடங்கள் வரை மூடி வைத்து மெல்லிய தீயில் வைத்து வேகவிடவும் பின் தேங்காய் துருவல் கொத்தமல்லி தழை சேர்த்து பெருங்காயத்தூள் தூவி கிளறி இறக்கவும்

  12. 12

    சுவையான ஆரோக்கியமான வாழைத்தண்டு கூட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes